ஹோம் /திருச்சி /

திருச்சியில் அமையவிருக்கும் ஒலிம்பிக் அகாடமி..! சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழகம் இனி கலக்கும்..!

திருச்சியில் அமையவிருக்கும் ஒலிம்பிக் அகாடமி..! சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழகம் இனி கலக்கும்..!

X
திருச்சி

திருச்சி

Trichy Olympic Academy : கிராமப்புற மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் சமூக ஆர்வலர்களின் கருத்து.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "புதிய துறைகளில் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன" என்று தெரிவித்தார். மேலும் “திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் எனவும், ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தயாரிக்கும் ஒரு பயிற்சி மையம் ஆக திகழும். உலக தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும் வகையில் தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் மேலும் அமைக்கப்பட உள்ளன” என தெரிவித்தார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தாமஸ் தெரிவிக்கும்போது, “திருச்சி மாநகரம் ஒரு மத்திய பகுதியாக அமைந்துள்ளது. இங்கு ஒலிம்பிக் அகாடமி அமைப்பது விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சிறந்த நற்செய்தியாகும். குறிப்பாக திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமப்புற மாணவர்கள் தங்களது விளையாட்டு திறமைகள் வளர்த்துகொள்ள சரியான ஒரு இடம் இல்லை என்பது பல வருடங்களாக கிராமப்புறங்களில் மாணவர்களுக்கு கவலையாகவே இருந்தது.

முதல்வரின் இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு ஒலிம்பிக் அகாடமி அமைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் பல விளையாட்டு வீரர்கள் உருவாகி தமிழ்நாட்டிற்கு பெறுமை தேடி தருவார்கள் என்பதில் நிச்சயம் மாற்றுக்கருத்தில்லை” என்று அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Trichy