பள்ளி திறப்பு குறித்து மாற்றம் இருந்தால் முதல்வர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பெரும்பிடுகு முத்தரையர் 1348 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12 வகுப்பு வரையிலும்,அதேபோன்று ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் 5ம் தேதி பள்ளிகள் திட்டமிட்டவாறே திறக்கப்படும். பள்ளித் திறப்பில் மாற்றம் இருந்தால் முதல்வர் அதனை அறிவிப்பார்.
தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். முறையான சோதனைகளுக்குப் பிறகே பள்ளி பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படும்.
திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தை திறந்து வைக்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வந்துள்ளது. இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் மணி மண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். லேப்டாப் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல சைக்கிள் லேப்டாப் வழங்கப்படும்.
இதையும் படிங்க : பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும்... அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை...!
பள்ளி திறப்பு அன்றே மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படும். அதற்கு தேவையான பாட புத்தகங்கள் கையிருப்பில் உள்ளது. பழுதடைந்த கட்டிடங்களை புதுப்பிக்கும் திட்டத்தினை கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி வேலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில் 185 ஊராட்சிகளில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் புதுப்பிக்கப்படும்.
உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் கட்டுவதற்கு நபார்டு வங்கி உதவி தேவைப்படுகிறது.நபார்டு வங்கி ஒட்டுமொத்த அமைச்சர்களின் துறைகளுக்கு நிதி உதவி வழங்குகிறது.அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறைக்கும் நிதி உதவி வழங்கப்படும். விரைவில் நிதியை பெற்று ஒரு மாத காலத்திற்குள் பள்ளிகள் புதுப்பிக்கும் பணி துவங்கும்” என்றார்.
சே.கோவிந்தராஜ், திருச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbil Mahesh Poyyamozhi, Govt School, Trichy