சாலையில் சுற்றி தெரியும் மனவளர்ச்சி குன்றிய நபர்களை பல ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறார் அன்பாலயம் செந்தில்குமார்.
திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த. பல மொழிகளைப் பேசக்கூடிய மனிதர்கள், மனநலம் பாதித்தவர்கள், அனாதைகளாக சுற்றித் திரிகிறார்கள். ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்தும், கண்ணில்பட்டவர்கள் வாங்கிக்கொடுக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டும் வாழ்கிறார்கள். தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை, கைவிடப்பட்டவர்களது வாழ்க்கையை மீட்டெடுக்க தனியார் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

அன்பாலயம்
அந்த வகையில் திருச்சி குண்டூர் பகுதியில் அன்பாலயம் என்கின்ற ஆதரவற்றவர்களுக்கான இல்லத்தினை நடத்தி வருகிறார் ‘அன்பாலயம் செந்தில்குமார்’, இவர் கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக தனது நண்பர்களின் உதவியோடு திருச்சி மாநகரத்தில் தென்படும் கைவிடப்பட்டவர்களை மீட்டுஅவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்கிவருகிறார்.

அன்பாலயம்
இதற்கு முழு அங்கீகாரத்தையும், ஒத்துழைப்பையும், வழிகாட்டலையும் அரசும் இணைந்து வழங்கி வருகிறது. மேலும் திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல் இன்னும் பல்வேறு மாவட்டங்களில் தனது அன்பாலயத்தை விரிவுபடுத்து வருகிறார் செந்தில்குமார்.
மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கு முறையான உடற்பயிற்சியும் அன்பாலயத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்புக்கு:
அன்பாலயம் - மன நல காப்பகம்,
குண்டூர்,
திருச்சி 7
கைபேசி எண்: 9443167607

திருச்சி அன்பாலயம்
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.