ஹோம் /திருச்சி /

வெள்ளம் சூழ்ந்த திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை மூடல்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை...

வெள்ளம் சூழ்ந்த திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை மூடல்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை...

திருச்சி

திருச்சி அம்மா மண்டபம் படித்துறை

Trichy Srirangam Amma Mandapam | ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பரிகார பூஜைகள் செய்வது உள்ளிட்டவைகள் தடை செய்யப்பட்டு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் 2 லட்சம் கன அடி உபரி நீர் தற்போது முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அணைகள் மீண்டும் நிரம்பி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் மீண்டும் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை பகுதியில் இரு கரைகளை தொட்டபடி காவிரி நீர் செல்கிறது.  இந்நிலையில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பரிகார பூஜைகள் செய்வது உள்ளிட்டவைகள் தடை செய்யப்பட்டு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் தற்காலிகமாக இன்று முதல் மூடப்பட்டு உள்ள நிலையில் மீண்டும் மறு உத்தரவு வர வரை மூடப்பட்டிருக்கும், காவிரி ஆற்றில் உபரி நீர் படிப்படியாக குறைந்த உடன் வழக்கம் போல அம்மா மண்டபம் திறக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது..

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Cauvery River, Local News, Trichy