Home /trichy /

Trichy : யானைக்காக பிரத்யேக நீச்சல்குளம்.. திருவானைக்கோவிலின் செல்லப்பிள்ளை அகிலா செய்யும் லூட்டி..

Trichy : யானைக்காக பிரத்யேக நீச்சல்குளம்.. திருவானைக்கோவிலின் செல்லப்பிள்ளை அகிலா செய்யும் லூட்டி..

திருவானைக்காவல்கோவில்

திருவானைக்காவல்கோவில் யானை அகிலா

Trichy Thiruvanaikovil : திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் அழகிய அகிலா யானையின் சேட்டைகள். அகிலாவுக்காக இக்கோவிலில் செய்யப்பட்டுள்ள விஷேச ஏற்பாடுகளை விவரிக்கும் வீடியோ தொகுப்பு இது..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli
திருச்சி மாவட்டத்தின் திருவானைக்காவலில் உள்ள அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த கோவிலில், காவிரியில் இருந்து துதிக்கை மூலம் தண்ணீர் கொண்டு வந்து யானை சிவபெருமானை வணங்கியதாக வரலாறு கூறுகிறது. அதனாலேயே இந்த கோவிலுக்கும், யானைக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. தற்போது இந்த கோவிலில் இருக்கும் யானை அகிலா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுகிறது.

மேலும் இந்த கோவிலில் நடக்கும் அனைத்து விழாக்களுக்கும் யானையின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. அனைத்து விழாக்களிலும் யானைக்கும் சிறப்பு செய்யப்படுகிறது. இந்த அகிலா யானை இங்கே கோவிலில் நடக்கும் பூஜைகளில் பங்கேற்று சுவாமிக்கு இறைப்பணியாற்றி வருகிறது.

அந்த வகையில் இங்கு தற்போது இருக்கும் யானை அகிலா 2002 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி பிறந்தது. அந்தவகையில் அகிலாவுக்கு தற்போது 19 வயது நிறைவடைந்து 20 வயது நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் கடந்த மே மாதம் அகிலாவின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தப் பிறந்தாள் கொண்டாட்டத்தில் அகிலா செய்த சுட்டித்தனம் அனைவரையுமே ரசிக்க வைத்தது.

பாகனுடன் அகிலா யானை


மேலும் அகிலாவுக்காக, இந்த கோவிலில் நந்தவனத்தில் நடைபாதை, நீச்சல் குளம் மற்றும் 1200 சதுர அடியில் சேற்றுக் குளியலுக்காக பள்ளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகிலா யானை இங்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் செல்லப்பிள்ளையாகஇருந்து வருகிறது. அந்த அளவுக்கு அகிலாவின் சுட்டித்தனம் அனைவரையும் பார்த்து ரசிக்க வைக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காலை எழுந்தவுடன் அகிலாவுக்கு அங்கு அமைக்கப்பட்டிருக்கும் நீர்ச்சாரலில் குளியல், அதனையடுத்து விதவிதமான காலை உணவு. பிறகு சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் அகிலா மாலை நேரத்தில் நந்தவனத்தில் நடைபயிற்சி மேற்கொள்கிறது. பின்னர் அங்கே இருக்கும் நீச்சல் குளத்தில் அதனை குளிக்க வைக்கின்றனர். அந்த வகையில் நீச்சல் குளத்தில் நீரை பார்த்ததுமே, துள்ளி குதித்த அகிலா கொண்டாட்டத்தில் அழகாக நீச்சலடித்து அனைவரையும் வியக்க வைக்கிறது.

பாகன் ஜம்புநாதனுடன் அகிலா யானை


அகிலா ஜாலியாக நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப்பதை சுற்றியிருப்பவர்கள் கண்கொட்டாமல் வேடிக்கை பார்க்கின்றனர். யானை பாகனின் கட்டளைக்கு அழகாக கீழ்படியும் அகிலா, செய்யும் செயல்கள் அனைத்துமே நம்மை வியக்க வைக்கிறது. மேலும் அவ்வப்போது சில சில சேட்டைகள் செய்து அனைவரையுமே ரசிக்க வைக்கிறது இந்த செல்லக்குட்டி அகிலா.

அகிலா யானை


யானைகள் பார்ப்பதற்கு பெரியதாக இருந்தாலும் அது செய்யும் அனைத்துமே குழந்தைத்தனமாக தான் இருக்கும். அந்த வகையில் யானை அகிலா யானைப்பாகன் சொல்லும் அனைத்திற்கும் அழகாக கட்டுப்பட்டு செய்யும் செயல்கள் அனைத்துமே சற்று அதிக குழந்தைத்தனம் கொண்டதாகவே உள்ளது. இதன் காரணமாக கோவிலில் உள்ள அனைவருக்குமே அகிலா மிகவும் பிடித்து விட்டது. இந்த சுட்டிகுழந்தை அகிலா இன்னும் நீண்ட ஆண்டுகளுக்கு வாழ்ந்து கோவிலுக்கு இறைப்பணி செய்ய வேண்டும் என்பது அங்கு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி வரும் பக்தர்கள் அனைவருக்குமே விருப்பமான ஒன்றாக உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

நீச்சல்குளத்தில் உற்சாக குளியல் போடும் அகிலா யானை


அனைத்து சூட் தனமான விளையாட்டுகளையும் செய்து விட்டு நமக்கு நன்றி சொல்லி அனுப்பும் விதம் அனைவரையும் மெய் சிர்க்க வைத்தது.

திருச்சி  மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருவானைக்கோவிலுக்கு செல்லும் பாதையை காட்டும் கூகுள் வரைபடம்..

Thiruvanaikovil
Published by:Arun
First published:

Tags: Elephant, Local News, Trichy

அடுத்த செய்தி