முகப்பு /செய்தி /திருச்சி / “வெறி ஏத்தாதீங்க...“ - அஜித் படத்துக்கு அப்டேட் கேட்கும் ரசிகர்கள்... திருச்சியை திணறடித்த போஸ்டர்கள்..!

“வெறி ஏத்தாதீங்க...“ - அஜித் படத்துக்கு அப்டேட் கேட்கும் ரசிகர்கள்... திருச்சியை திணறடித்த போஸ்டர்கள்..!

அஜித் பட போஸ்டர்

அஜித் பட போஸ்டர்

அஜித்குமாரின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதியாவது அப்டேட் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

அஜித் படத்தையும், அப்டேட் கேட்கும் ரசிகர்களையும் என்றும் பிரிக்க முடியாது என்பதைப் போல, அடுத்த படத்தின் அப்டேட் கேட்டு திருச்சி நகரம் போஸ்டர்களால் நிரம்பியுள்ளது.

வலிமை படத்திற்காக செல்லும் இடமெங்கிலும், காணும் நபர்கள் அனைவரிடமும் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்ட சம்பவம் அரங்கேறியது. இனிமேல் வலிமை அப்டேட் கேட்க வேண்டாம் என நடிகர் அஜித்தையே அறிக்கை வெளியிட வைத்தது, இந்நிலையில், திருச்சி நகரில் போஸ்டர்களை ஒட்டி, லைகா நிறுவனத்திடம் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டுள்ளனர். அதில், “சீக்கிரமாக ஏகே 62 படத்தோட அப்டேட்ட விடுங்க லைக்கா... வெயிட்டிங்ல வெறி ஏத்தாதீங்க” என்று வாசகத்தையும் வைத்துள்ளனர்.

அஜித் நடிக்கும் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் எனவும், மகிழ் திருமேனி இயக்குகிறார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், படத்தலைப்பு உள்ளிட்ட அப்டேட்கள் மார்ச் மாத இறுதியில் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அஜித்தின் தந்தையின் மறைவால் அறிவிப்பு தாமதமானது.

இதையும் படிங்க; நடிகை கிருதி சானோனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

ஏப்ரல் மாதம் பாதியை நெருங்கிவிட்ட நிலையில், அஜித்குமாரின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதியாவது அப்டேட் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

top videos
    First published:

    Tags: Actor Ajith