ஹோம் /திருச்சி /

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

X
திருச்சி

திருச்சி

Trichy News : திருச்சி மாநகராட்சி மேயரை எதிர்த்து அதிமுக கவுன்சிலர்கள்  வெளிநடப்பு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணை மேயர் திவ்யா, மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மாமன்ற கூட்டத்தில் மக்களின் பிரச்சனைகள் குறித்தும், குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வாய்ப்பு கோரி பேசத் துவங்கினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்களை பேசவிடாமல் தடுத்தனர்.  இதுகுறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் புகார் தெரிவித்தும் அவர் திமுக உறுப்பினர்களுக்கு ஆதரவாக பேசி அதிமுக உறுப்பினர்களை பேசவிடாமல் தடுத்ததாக அதிமுக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

இதையும் படிங்க : புத்தாண்டை முன்னிட்டு மதுரை மல்லி ரூ.1800க்கு விற்பனை..

இதன் காரணமாக அதிமுக உறுப்பினர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, அனுஷ்யா ஆகியோர் மேயரை இருக்கையை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து, திமுகவினரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தஞ்சை மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து மாமன்ற மாண்பையும் மீறி இழிவாக பேசியதை கண்டிக்கிறோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில், அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பளிக்காமல் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தியதையும் அதற்கு உறுதுணையாக இருக்கும் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட திமுகவினரை கண்டிக்கிறோம். எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தோம்” என்று தெரிவித்தனர்.

செய்தியாளர் : மணிகண்டன் - திருச்சி

First published:

Tags: ADMK, DMK, Local News, Trichy