முகப்பு /திருச்சி /

வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை பதிவேற்ற வேண்டும் - திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு

வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை பதிவேற்ற வேண்டும் - திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு

தொழிலாளர்கள்

தொழிலாளர்கள்

Trichy District | புலம்பெயர்ந்து வந்த வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

பிகார், ஒடிசா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு அதிகமான அளவில் வேலைக்காக வருகின்றனர். கட்டுமான தொழில், ஆடை உற்பத்தித் தொழிலில் தொடர்பாக வேலைகளிலும் ஈடுபட்டுவந்த இவர்கள், தற்போது உணவகங்கள், செக்யூரிட்டி பணி, பெட்ரோல் பங்க், முடி திருத்தகம், வணிக வளாகங்கள் என பலவித பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.

இதேபோன்று, ஆரம்ப காலத்தில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் வேலை செய்துவந்த வெளிமாநிலத்தவர்கள், தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேலை செய்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தலின்படி, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தொழிலாளர் துறையின் ஆய்வுக்கு உட்பட்ட கடைகள், நிறுவனம், உணவு நிறுவனம், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், முடி திருத்தகம், தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், பீடி நிறுவனம், மருத்துவமனை, திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களிலும் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

Must Read : சிலிர்ப்பூட்டும் சின்னக் கல்லாறு அருவி... ஒரு என்ஜாய் ட்ரிப் போகலாம்!

இத்தகைய வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர்துறையின் https://labour.tn.gov.in/ism/ என்ற வலைதளத்தில் அனைத்து நிறுவன வேலை அளிப்பவர்களும் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Migrant workers, Trichy