ஹோம் /திருச்சி /

திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அ.தி.மு.கவினர் அஞ்சலி

திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அ.தி.மு.கவினர் அஞ்சலி

X
அஞ்சலி

அஞ்சலி செலுத்தும் அ.தி.மு.கவினர்

Trichy | திருச்சி மொழிப்போர் தியாகிகள்நினைவிடத்தில் அ.தி.மு.க சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965–ம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் உள்ளன.

இந்த நினைவிடங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25–ந் தேதியில்மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளாக அ.தி.மு.க, திமுகஉள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனுசரித்து வருகின்றன.

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி, அ.தி.மு.கவினர் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் கூடினார்கள்.

இனிப்பும் ஆரோக்கியமும் நிறைந்த பழ அல்வா - திருச்சி மக்களின் ஃபேவரைட் இதுதான்..

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டடுமொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தை அடைந்ததும் அங்கு அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Trichy