ஹோம் /திருச்சி /

அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வரும் திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனை

அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வரும் திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனை

மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனை

மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனை

Trichy District News : மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்றும், மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராக மண்ணச்சநல்லூர் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளும், தனியார் கல்லூரியும் இயங்கி வருகிறது.

மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஒன்றியத்தில் விவசாய தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்களே அதிக அளவில் உள்ளனர். இதனால் ஏதாவது உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு தான் சிகிச்சை பெற அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.

இதையும் படிங்க : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா... நிகழ்ச்சி நிரல் விவரம்

மேலும், நீரிழிவு நோய்க்கு மாத்திரைகள் வாங்குவதற்கும் தினமும் 100-க்கணக்கானோர் வருகின்றனர். தினமும் 500-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில், இங்கு சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளுக்கு போதுமான மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதில்லை என்றும், நோயாளிகளை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதுமட்டுமின்றி படுக்கை வசதி, சுகாதார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Trichy