Home /trichy /

Trichy | நான் அப்பாவ பாக்கனும்... சவுதியில் இறந்தவரின் உடலை மீட்டுத்தர கண்ணீர் விடும் அம்மாவும், மகளும்...

Trichy | நான் அப்பாவ பாக்கனும்... சவுதியில் இறந்தவரின் உடலை மீட்டுத்தர கண்ணீர் விடும் அம்மாவும், மகளும்...

கணவரை

கணவரை இழந்த பெண்

Trichy | சவுதி அரேபிய நாட்டில் மர்மமான முறையில் இறந்த தனது கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி, திருச்சியில் மனைவியும், மகளும் கண்ணீருடன் காத்துக்கிடக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செப்டம்பர் 12 அன்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், சவுதி அரேபியாவில் மர்மமாக இறந்த தனது கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனைவி அன்னக்கிளி கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

திருச்சி வடக்கு சித்தாம்பூர் காவேரி பாளையத்தை சேர்ந்தவர் சின்னமுத்து புரவியான் (வயது 52). இவரது மனைவி அன்னக்கிளி. இத்தம்பதியருக்கு 12 ஆம் வகுப்பு படித்து முடித்த நிவேதா என்ற மகள் உள்ளார்.

கணவரை இழந்த பெண்ணும், மகளும்


கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக சின்னமுத்து சவுதி அரேபிய நாட்டிற்கு வெல்டர் வேலைக்காக சென்றுள்ளார். கடந்த புதன்கிழமை இரவு சின்னமுத்து தனது மனைவி அன்னக்கிளி மற்றும் மகளிடம் சவுதியில் இருந்து அலைபேசி மூலம் பேசியுள்ளார்.

கணவரை இழந்த பெண்


அடுத்த நாள் அன்னக்கிளி தனது கணவரிடம் பேச முற்பட்டபோது, கணவரின் செல்போன் switch off ஆகி இருந்தது. கணவரின் நண்பரை தொடர்புக்கொண்டு கேட்டபோது, உங்கள் கணவர் சவுதியில் காணாமல் போய் விட்டதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் சவுதியிலிருந்து பேசிய சின்னமுத்துவின் நண்பர், ‘உங்களின் கணவர் சின்னமுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையிலிருக்கிறார். எனது கணவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். உரிய விசாரணை நடத்தி எனது கணவரின் உடலை மீட்டுத் தரவேண்டுமென அன்னக்கிளியும், அவரது மகள் நிவேதாவும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி