ஹோம் /திருச்சி /

கேரிக்கேச்சர் ஓவியத்தை தமிழகத்தில் பிரபலப்படுத்தும் திருச்சி வாலிபர்!

கேரிக்கேச்சர் ஓவியத்தை தமிழகத்தில் பிரபலப்படுத்தும் திருச்சி வாலிபர்!

கேரிக்கேச்சர் ஓவியம் வரையும் கேம்பியன்

கேரிக்கேச்சர் ஓவியம் வரையும் கேம்பியன்

Caricature Painting | ஆரம்ப காலத்தில் நான் சுற்றுலா தளம், கடைவீதி போன்ற இடங்களில் அமர்ந்து செய்து வந்தேன். அப்போது எனக்கு ஒரு ஓவியத்திற்கு 20 ரூபாயும் கொடுத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

கேமராக்களின் வருகைக்கு பிறகு ஓவியங்கள் மீது மக்கள் பெரிய ஆர்வம் காட்டவில்லை. இதனால் இதை நம்பி இருந்த ஓவியர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும் இருட்டில் கிடைத்த ஒரு சிறிய ஒளிக்கீற்றாய் ஓவியர்களுக்கு கிடைத்த மாற்று ஓவிய முறை தான் இந்த கேரிகேச்சர்.

இந்த வகை ஓவியங்கள் முதன் முதலில் மேற்கத்திய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதை தற்போது தமிழகத்தில் அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறார் திருச்சி இளைஞர் கேம்பியன்.

வேடிக்கையாகவும், வினோதமாகவும் வித்தியாசமாகவும் மனிதர்களை வரைவதே இந்த ஓவியத்தின் சிறப்பு அம்சம். தனி மனிதனுடைய சுபாவத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தும் விதத்தில் அவர்களது உடல் அமைப்பை வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்துவதே இந்த கேரிகேச்சர் ஓவியம்.

இதையும் படிங்க : என்னை பார்த்து மோடி பயப்படுகிறார் - திருச்சியில் ஆ.ராசா பேச்சு

திருச்சி மாவட்டம் மேலப்புதூர் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கேம்பியன். தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு தனக்கு ஓவியத்தில் ஆர்வம் வந்ததை ஒட்டி தான் இதை கையில் எடுத்து செய்து வருவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து கேம்பியன் கூறும்போது, “கேமரா என்பது இருப்பதை அப்படியே காட்டும். ஆனால் நாங்கள் வரையும் ஓவியம் ஒருவரை வேறு கோணத்தில் காட்டடுவது ஆகும். கேமரா வந்த பிறகு நிறைய ஓவியர்கள் வேலை இல்லாமல் தற்கொலை செய்து கொண்டார்கள்.

ஆனால் ஒருவர் மட்டும் இத்தாலியில் கேரிகேச்சர் ஓவியத்தை கையில் எடுத்தார். அது மக்களிடம் நல்ல வரவேற்பைபெற்றது. அவரை பின்பற்றி தான், நான் இந்த கேரிகேச்சர் ஓவியத்தை செய்து வருகிறேன்.

ஆரம்ப காலத்தில் நான் சுற்றுலா தளம், கடைவீதி போன்ற இடங்களில் அமர்ந்து செய்து வந்தேன். அப்போது எனக்கு ஒரு ஓவியத்திற்கு 20 ரூபாயும் கொடுத்தனர். ஆனால் தற்பொழுது 150-லிருந்து ஒவியத்திற்கு ஏற்றார் போல் விலை நிர்ணயம் செய்கிறேன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனது ஓவியத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது” என்று மீண்டும் ஒரு ஓவியம் வரைய ஆயத்தமானார் கேம்பியன்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy