மார்கழி கடுங்குளிரில் சாலையோரத்தில் படுத்துறங்கும் நடைபாதை வாசிகளுக்கு பள்ளி மாணவி போர்வை வழங்கி அவர்களது குளிரைப் போக்கினார்.
திருச்சி சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த மாணவி சுகிதா ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் தனது சகோதரருடன் இணைந்து தன்னால் இயன்ற சமூகப் பணியினையும் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மார்கழி மாதம் கடும் குளிர் காலம் என்பதால் திருச்சி மாநகர் பகுதிகளில் சாலையோரங்களில் படுத்து உறங்கும் நடைபாதைவாசிகள், குளிரால் அவதிப்படும் நிலையில் அவர்களுக்கு நள்ளிரவு நேரத்தில் போர்வை வழங்கி அவர்களின் குளிரை போக்கினார்.
ஜங்ஷன் ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் மற்றும் காவிரி பாலத்தில் படுத்து உறங்கும் ஆதரவற்ற மற்றும் சாலையோரத்தில் வசிக்கும் 100 பேருக்கு கடும் பனியையும் பொருட்படுத்தாது நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரையிலும் தனது சகோதரருடன் சென்று போர்வையை வழங்கும் பணியில் ஈடுபட்டார்.
மூன்றாவது ஆண்டாக தானும் தனது சகோதரரும் சேர்ந்து சேர்த்த பணம் மற்றும் பெற்றோரிடம் வாங்கிய பணத்தைக் கொண்டு போர்வை வழங்கும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும், இது தனக்கு மிகுந்த மன நிறைவு அளிப்பதுடன் தம்மால் முயன்றதை போல பலரும் தங்களால் முயன்றவாறு இல்லாதவர்களுக்கு ஏதேனும் உதவிபுரியும் பட்சத்தில் அவர்கள் மனம் மகிழ்வார்கள், இல்லாமை நீங்கும் என்றும் மாணவி சுகித்தா தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, School student, Trichy