முகப்பு /திருச்சி /

அலங்கார மீன் வளர்ப்பு குறித்து திருச்சியில் இலவச பயிற்சி... எங்கு நடக்கிறது? யாரை தொடர்பு கொள்வது?

அலங்கார மீன் வளர்ப்பு குறித்து திருச்சியில் இலவச பயிற்சி... எங்கு நடக்கிறது? யாரை தொடர்பு கொள்வது?

அலங்கார மீன் வளர்ப்பு

அலங்கார மீன் வளர்ப்பு

Trichy | திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் பகுதியில் வரும் மூன்றாம் தேதி வண்ண மீன்களை வளர்ப்பதற்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

புதிய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம், புழுதேரி, கரூர் மற்றும் மீன் வள பல்கலை கழக திருச்சி நிலையான மீன்வளர்ப்பு மையம் இணைந்து நடத்தும் ஒரு நாள் இலவச அலங்கார மீன் பயிற்சியானது செயல் விளக்கத்துடன் திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், குழுமணி மெயின் ரோடு அலங்கலம், ஜீயபுரத்தில் உள்ள மீன் வள பல்கலை கழக ஆராய்ச்சி மையத்தில் இன்று (3.11.2022) வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள ஊரக இளைஞர்கள் மற்றும் மகளிர்கள், அலங்கார மீன்குஞ்சு உற்பத்தி செய்வோர், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள் போன்றோர் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இதையும் படிங்க : கோவை கார் வெடிப்பு - திருச்சியில் சோதனை..செல்போனை பறிமுதல் செய்து விசாரணை என தகவல்...

top videos

    மேலும், இப்பயிற்சியில் முக்கிய அலங்கார மீன் இனங்கள், குட்டியிடும் மீன்கள் மற்றும் முட்டையிடும் மீன்களின் இனப்பெருக்கம் பற்றிய பாடங்கள், செயல்முறை கூடிய தொழில்நுட்பங்கள், மீன்வளர்ப்புக்கான உபகரணங்கள், மீன்களுக்கான உணவுகள், உணவு தயாரிப்பு முறைகள், நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் மற்றும் அலங்கார மீன்களை சந்தைப்படுத்துதல் போன்றவை குறித்து விரிவாக விளக்கங்கள் அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள - தொலைபேசி எண் 6381150356 தொடர்பு கொள்ளலாம்.

    First published:

    Tags: Local News, Trichy