திருச்சியில் வசித்து வரும் மூதாட்டி மாரியம்மாள். இவரது மகன் விஜயராமன், பிறக்கும்போது தனது இரண்டு கால்களில்அசைவுகள் இல்லாமல் ஒருவித தசை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மாரியம்மாளும் அவரது மகனும் பிறரிடம் உதவி அல்லது யாசம் கேட்டு தான் அவர்கள் தரும் பணத்தில் தான் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், விஜயராமன் கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். உடல்நிலை மேலும் மோசமடையவே விஜயராமன் இறந்து விட்டார். மகன் இறந்த துக்கத்திலும் மகனின் இறுதி சடங்குகள் செய்யக்கூட காசில்லாமல் அவரது தாய் தவித்தார்.
புத்தூர் காவல் துறையினர் மேற்கண்ட சம்பவம் குறித்து தெரிந்து கொண்ட பின் விஜயராமனின் நல்லடக்கத்திற்கு உதவி செய்ய அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விஜயகுமார் மூதாட்டிக்கு பண உதவிகள் செய்ததுடன் அவருக்கு இறுதி சடங்கிற்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார். குலிமிக்கரை மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மூதாட்டி தனக்கு உதவிய காவல்துறை மற்றும் விஜயகுமாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy