முகப்பு /திருச்சி /

வேங்கை வயல் விவகாரம்... சிபிசிஐடியை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

வேங்கை வயல் விவகாரம்... சிபிசிஐடியை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

X
இந்திய

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

Pudukottai | வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை பட்டியலின மக்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும், வேங்கை வயல் பட்டியலின மக்களை விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்தக் கூடாது, உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிஐடியு மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

First published:

Tags: Local News, Trichy