Home /trichy /

திருச்சியில் ஒரு மெரினா பீச்! குடும்பத்தோடு பொழுதை கழிக்க வரும் உள்ளூர்வாசிகள்

திருச்சியில் ஒரு மெரினா பீச்! குடும்பத்தோடு பொழுதை கழிக்க வரும் உள்ளூர்வாசிகள்

திருச்சியில்

திருச்சியில் ஒரு மெரினா பீச்!

திருச்சியில் அமைந்துள்ளது காவிரி பாலம். திருச்சியையும் ஸ்ரீரங்கம் தீவினையும் இணைக்கும் முக்கிய பாலமாகும். தீவு என்பதற்கு காரணம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருச்சியில் அமைந்துள்ளது காவிரி பாலம். திருச்சியையும் ஸ்ரீரங்கம் தீவினையும் இணைக்கும் முக்கிய பாலமாகும். தீவு என்பதற்கு காரணம் திருச்சி முக்கொம்பில் இருந்து கல்லணை வரை கொள்ளிடம் ஆறும், காவிரி ஆறும் பரந்து ஓடும் பகுதியில் நிலப்பரப்பை கொண்டு அமையப் பெற்றுள்ள நீண்ட பெரிய பகுதியாக ஸ்ரீரங்கம் உள்ளது. இதனால், தீவு என்று அழைக்கப்படுகிறது. திருச்சியையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்க 1924 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் முதல் நடைபாதை பாலம் கட்டப்பட்டது.

    அதன் பிறகு பரந்து விரிந்து கடல்போல் காட்சியளிக்கும் காவிரியாற்றின் குறுக்கே, 1976ஆம் ஆண்டு புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. இப்பாலமே தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    ஒருபுறம் கொரோனா பெருந்தொற்று காரணமாக, உள்ளூர்வாசிகள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு மாற மக்கள் வெளியே வர தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில் திருச்சி காவிரி பாலம் தற்போது ஒரு "மெரினா பீச்" போன்று காட்சி அளித்து வருகிறது. திருச்சி மக்கள், மாலை நேரங்களில் குடும்பத்துடன் வந்து பாலத்தின் நடைபாதையில் நின்று பானி பூரி கடலை, புட்டு போன்றவையை சாப்பிட்டுக்கொண்டே பொழுதை கழிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

    குடும்பத்தினர் மட்டும்தான் வருகிறார்களா என்று பார்த்தால், கல்லூரி பயிலும் இளசுகள், காதல் ஜோடிகள் என்று பலரும் பாலத்தில் நின்று கொண்டு இயற்கை காற்றோட்டத்தை ரசித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக குடும்பத்துடன் வந்திருந்தவர்களை சந்தித்துப் பேசினோம், வாரத்தில் எப்படியாவது இரண்டு நாட்களாவது குடும்பத்துடன் குழந்தைகளுடன் வந்துவிடுவோம்.
    குழந்தைகளும் வீட்டிலேயே ரொம்ப நாட்கள் இருந்து வருகின்றனர்.

    பொழுதுபோக்குக்காக இங்கு அழைத்து வந்து காவிரி காற்றோட்டத்தில் கடலை வாங்கி சாப்பிட்டு விட்டு செல்வோம்.

    சாதாரண நாட்களில் வேலை என்று ஓடுவதால், குடும்பத்தின் மீது பெரிதும் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.

    அதற்காக அவர்களை இங்கு அழைத்து வருவது வருவதுண்டு, அவர்களுக்கும் இங்கு வந்தால் ஒரு மனமகிழ்வு ஏற்படும் என்றனர்.

     
    Published by:Suresh V
    First published:

    Tags: Trichy

    அடுத்த செய்தி