திருச்சியில் நாய்குட்டிகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகரில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை நாய் கடியினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை வந்து சிகிச்சை பெற்று செல்லும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வெறி நாய்களுக்கு தடுப்பூசியும் போட வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மாநகராட்சிக்கு அவ்வப்பொழுது வைத்து வருகின்றனர்.
சுற்றித்திரியும் தெரு நாய்கள் பராமரிப்பின்றியும் தோல் நோய் பாதித்தும், ராபீஸ் நோய் பாதித்தும், சுற்றி திரிவதால் இவை மக்களை கடிக்கும் போது அவர்களுக்கும் ராபீஸ் நோய் ஏற்படுகிறது. அதனாலேயே இவற்றை மக்கள் தொந்தரவாக கருதி அதை கொல்ல முயற்சிக்கிறார்கள் எனவும் தாய் நாய்களுக்கு போதிய அளவு உணவு கிடைக்காததால் குட்டிகளுக்கு பால் கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே நாய்களை பாதுகாக்கும் வகையில் அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து நாய்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இளம்பெண் ஒருவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாய் குட்டிகளுடன் வந்து மனு அளித்தார்.
மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாய்களுக்கு தன்னார்வலர்கள் உணவு அளித்து வருகின்றனர். ஆனால் அவரவர் சக்திக்கு உட்பட்டு குறைந்த அளவு நாய்களை தான் பராமரிக்க முடிகிறது. மாநகரத்தில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் அதன் குட்டிகளையும் அரசு தான் பராமரிக்க முடியும் எனவே தெரு நாய்களை உரிய முறையில் அரசு பராமரித்து அதற்கு கருத்தடை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: District collectors, Dog, Local News, Trichy