ஏழை, எளிய மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் படிப்பதற்கு தேவையான நூல்கள், அன்றாட தமிழ், ஆங்கில செய்தித்தாள்கள், ஆகியவற்றை படித்து பயன் பெறும் வகையில்திருச்சி, புத்தூர், பிஷப் குளத் தெரு பகுதியில் யோகா ஆசிரியர் விஜயகுமார் குடும்பத்தினர் இலவச நூலகம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
அறிவை அளிக்கக்கூடிய நூல்கள் நிறைந்திருக்கும் இந்த நூலகத்தை தனி நபருக்கும், சமுதாயத்திற்கும் பயனளிக்கக் கூடிய வகையில் அமைத்துள்ளனர் இந்த குடும்பத்தினர்.
மனிதனை சிறந்த முறையில் வழி நடத்துவதில் நூல்களிற்கு அதிக பங்கு உண்டு.நல்ல நூல்களை வாசிப்பதால் ஒருவர் பண்படுகிறார், பக்குவம் அடைகிறார்.ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள். அதேபோல் நூலகம் இல்லாத ஊரில் குடி இருப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நூல்கள் பரந்த உலகத்தின்அனுபவத்தை நமக்கு கொடுக்கும்.
ஒவ்வொருவரும் தம் வீட்டில் சிறிய நூலகம் அமைத்திருப்பது சால சிறந்தது ஆகும்.ஆனால் அனைத்து வகையான நூல்களையும் வாங்கி சேமிப்பதென்பது இயலாத காரியம். அதற்கு பொருளாதாரமும், இடவசதியும் தேவைப்படும்.
இதையும் படிங்க : அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வரும் திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனை
அந்த வகையில் நூல்களினை, வாங்கியும் நண்பர்கள் வழங்கிய நூல்களை கொண்டும் சுமார் ஏழாயிரம் நூல்கள் கொண்ட நூலகத்தை வடிவமைத்துள்ளார் திருச்சியை சேர்ந்த ஒரு யோகா ஆசிரியர் விஜயகுமார்.
இந்த நூலகம் குறித்து விஜயகுமார் பேசும் போது “குழந்தைகளுக்கு சிறு வயது முதலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். சிறுவர்களுக்கான நூலகம் அமைத்து சிறுவயது முதலே வாசிப்பு பழக்கத்தை தூண்டும் போது அவர்களுக்கு அறிவு ரீதியான தேடல் அதிகரிக்கின்றது.
பெரியவர்களுக்கும், வீட்டில் உள்ள பெண்களுக்கும் உலகத்தைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள நூலகம் வழிவகுக்கின்றது.வாசிப்பவர்கள் தமக்கு தேவையான நூல்களை எளிதாக தெரிவு செய்து வாசிக்கும்
வகையில் வைத்துள்ளோம்”
இவரின்நூலக சேவையை பாராட்டி இவருக்குவிருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. விஜயகுமாருக்கு அவரின் மனைவி மற்றும் குடும்பத்தார் இந்த நூலகத்தை நடத்தி வர உதவுகின்றனர்.
நூல்களின் உலகத்தை காண்பதற்கு நமக்கு கிடைத்த ஒரு ஜன்னல். ஓவ்வொருவரது வீட்டிலும், ஓர் நூல் நிலையம் அவசியம் இருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும், அறிவியல் விஞ்ஞானியுமான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அறிவுறுத்தினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கற்பக விருட்சகமாக, அள்ள அள்ள குறையாத, வற்றாத வளமாக மக்களுக்கு என்றும் இருப்பது புத்தகங்கள் தான். எனவே மக்களின் வளமான வாழ்க்கைக்கு, என்றும் உறுதுணையாக இருப்பதுமட்டுமல்ல, ஒரு அமைதியான, பொறுமையான, அறிவார்ந்த மற்றும் வளமான சமுதாயம் உருவாக அடிப்படைக்காரணமாக இருப்பது புத்தகங்கள் தான் அதைஅறிந்து சேவையாற்றி வரும் விஜயகுமாருக்கு வாழ்த்துக்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy