ஹோம் /திருச்சி /

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அன்னதானம் திட்டத்தின் மூலம் 90 லட்சம் பக்தர்கள் பயன்!

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அன்னதானம் திட்டத்தின் மூலம் 90 லட்சம் பக்தர்கள் பயன்!

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம்

Srirangam Temple | அன்னதான திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் அன்னதான திட்டம் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் மதிய அன்னதானம் வழங்கி வந்த நிலையில் 2012-ஆம் செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதியிலிருந்து மூன்று வேளையும் அன்னதானம் வழங்க ஆரம்பிக்கப்பட்டது.

அன்று முதல் 30.09.2022 வரை 10 ஆண்டுகளில் 86 லட்சத்து 2 ஆயிரத்து 19 பேருக்கு இதுவரை அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்று இருக்கு 100 பேருக்கு 3500 ரூபாய் வீதம் செலவு செய்யப்படுகிறது.

மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக அன்னதானத் திட்டத்திற்கு செலவிடப்படுகிறது.

இதையும் படிங்க : திருச்சியில் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவு அமைக்க வேண்டும் - சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் கோரிக்கை

மேலும் உணவு பாதுகாப்பு துறையில் அன்னதான திட்டம் பதிவு செய்யப்பட்டு உரிமம் பெறப்பட்டு உரிய சான்றான BHOG என்ற சான்றிதழையும் ஸ்ரீரங்கம் கோவில் பெற்றுள்ளது.

இந்த அன்னதான திட்டம் ஸ்ரீரங்கம் கோவிலில் மட்டுமில்லாமல் இக்கோவிலின் உப கோயிலான திருவள்ளரை கோவிலில் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு நாள்தோறும் 100 நபர்களுக்கு மதியம் 12 மணி முதல் 2 மணி வரை நடைபெற்று வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல் அன்பில் மாரியம்மன் கோவிலிலும் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலிலும் வழங்கப்பட்டு வருகிறது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy