பெண் வேடத்தில் பள்ளி விழாவில் மூன்று மாணவர்கள் இணைந்து ஆடிய நடனத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள ஆல்பா பள்ளியில் அண்மையில் தமிழ் புத்தாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தனர். அதில் ஒன்றாக நடன நிகழ்ச்சியும் இடம்பெற்று இருந்தது.
நடிகர் விஷால் நடித்த அவன் இவன் என்ற படத்தில், விஷால் பெண் வேடத்தில் ”தியா தியா டோல்” என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். இந்தப் பாடல் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், ஆல்பா பள்ளியில் இருக்கிற தமிழ் வருடப் பிறப்பு கொண்டாட்ட விழாவில் நடன நிகழ்ச்சிக்காக இந்த பாடல் தேர்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, இந்த பாடலுக்கு நடனமாடுவதற்காக 3 மாணவிகள் மற்றும் 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுனர். அதில் 7 ஆம் வகுப்பு படிக்கும் தஸ்வத்ந், விஷாகன், எட்வின் ஜேஸ் ஆகிய மாணவர்கள் ஆர்வத்துடன் நடனமாட முன்வந்துள்ளனர். இந்த மூவருக்கும் ஆல்பா பள்ளியின் நடன ஆசிரியர் கீர்த்தனா 3 நாட்கள் பயிற்சி அளித்து, தமிழ் வருடப் பிறப்பு நாள் அன்று நடனம் ஆடவைத்துள்ளார்.
இதில் தஸ்வந்த் என்ற மாணவனின் நடனம் ஆடும் காட்சி மட்டும் அவரது தந்தை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதனைத்தொடர்ந்து, அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பெண் போன்று சேலை உடுத்திக்கொண்டு நடனமாடிய மாணவர்கள் அப்படியே கச்சிதமாகப் பெண் போன்றே சிறப்பாக நடனமாடியுள்ளனர். சமூக வலைத்தளத்தில் தஸ்வந்த் என்ற மாணவர் மட்டுமே பெண் வேடமிட்டு நடனமாடியதாகக் கருதப்பட்ட நிலையில், மூன்று பேரும் மாணவர்கள் என்ற தகவல் நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த பாடலுக்கு நடனம் ஆடுவதற்காக மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வில்சன் தாமஸ் ஆர்வம் காட்டி, மாணவர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளனர்.
செய்தியாளர் - கோவிந்தராஜ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dance, Viral Video