முகப்பு /திருச்சி /

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பக்தர்கள் அளித்த காணிக்கை விவரம்.! எவ்வளவு தெரியுமா?

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பக்தர்கள் அளித்த காணிக்கை விவரம்.! எவ்வளவு தெரியுமா?

X
உண்டியல்

உண்டியல் எண்ணிக்கை.

Srirangam temple hundiyal count | திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் உண்டியல் எண்ணப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 72 லட்ச்சத்து 701 ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் மாதம் தோறும் உண்டியல் எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுண்ட ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் இன்று கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஆர் ஹரிஹர சுப்பிரமணியன், கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி , உதவி மேலாளர் தி.சண்முகவடி ,கண்காணிப்பாளர்கள் மு.கோபாலகிருஷ்ணன் , செ.சரண்யா , வெ.மீனாட்சி , ஆய்வாளர்கள் கு.மங்கையர் செல்வி, பாஸ்கர், பானுமதி ஆகியோர் மேற்பவையில் திருக்கோயில் பணியாளர்கள் , தன்னார்வ தொண்டர்களால் எண்ணப்பட்டது.

அதில், 72,00,701 ரூபாயும் , தங்கம் 233 கிராம் , வெள்ளி 1442 கிராம் மற்றும் 372 வெளிநாட்டு ரூபாய்தாளும் பக்தர்கள் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Srirangam, Temple, Trichy