ஹோம் /திருச்சி /

திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 9 மாதத்தில் 54 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை

திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 9 மாதத்தில் 54 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை

திருச்சி அரசு மருத்துவமனை

திருச்சி அரசு மருத்துவமனை

Trichy Government Hospital | கடந்த 9 மாதத்தில் 54 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 9 மாதத்தில் 54 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் பெண்களை தாக்கும் நோய்களில் முதல் இடத்தில் இருப்பது மார்பக புற்று நோய் தான் என்று மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களின் மார்பக திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய், கொஞ்சம் கொஞ்சமாக பரவி நோய் தாக்கத்தை அதிகப்படுத்தும் பெண்கள் பால்சுரப்பி நாளங்கள் அல்லது அந்த குழாய்களுக்கு பாலை கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும் நாளங்களில் உருவாகும். இதனை நாள புற்றுநோய் என்று கூறுகின்றனர்.

பெண்களுக்கு 3 வகை மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதில் நாளப்புற்று நோய், மடிப்பு சதை புற்றுநோய் மற்றும் முற்றிலும் பரவிய புற்றுநோய்.

இதையும் படிங்க : திருச்சியில் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவு அமைக்க வேண்டும் - சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் கோரிக்கை

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவர்கள் கூறுகையில்,  “இதனை ஆரம்பத்தில் கண்டுபிடித்தால், மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். இதற்கு ஹார்மோன் தெரப்பி சிகிச்சை மற்றும் வேதி சிகிச்சை என்று சொல்லக்கூடிய கீமோ தெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதிகளவில் புற்றுநோய் பரவி இருந்தால் கதிரியக்கம் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது. எனவே மருத்துவர்கள் பெண்களுக்கு அதிகளவில் வழங்கும் அறிவுரை என்றால் அது மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனை முழுமையாக்குணப்படுத்த முடியும். இதில் 4 படி நிலைகள் உள்ளன.

முதல்படி நிலை புற்று நோய் அணுக்கள் மார்பகத்தை தவிர வேறெங்கும் பரவவில்லை என்றும், கட்டியின் சுற்றளவு 2.5 செமீ காட்டிலும் அதிகமில்லை என்று எடுத்து கொள்ளப்படும். இரண்டாம் நிலை அக்குள் வரை புற்றுநோய் பரவி 2.5 செமீ அளவைவிட பெரிதாகிவிட்டது என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மூன்றாவது படி நிலை என்பது முற்றிய நிலை ஆகும். அது மார்பக சுவர் மற்றும் மேல் தோலில் பரவி உள்ளது என்று கூறப்படுகிறது. நான்காம் படி நிலை என்பது புற்றுநோய்க்கும், புற்று நோய் மார்பகத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களான நுரையீரல், மூளை, எலும்புகள் என்ன எல்லாவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தியதாக முடிவு செய்யப்படும்.

இதையும் படிங்க : காவேரி கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்... விவசாயிகள் கோரிக்கை...

 இப்படி புற்றுநோய்கள் வகைப்படுத்தப்பட்டு, அவற்றிற்கான சிகிச்சைகள் தற்போது பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளு டன் மருத்துவமனைகளில் சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது. திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உலக தரம் வாய்ந்த அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் மார்பக புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படுகிறது.

அதில் இந்தாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மார்பக கட்டிகளையும், மிகச்சிறிய கட்டிகளையும் கண்டுபிடிக்க உதவும் ஒருவகை எக்ஸ்ரே கருவியான மம்மோ கிராம் என்ற கருவியின் உதவியுடன்சுமார் 750 பெண்களுக்கு இந்த நவீன கருவிகளை கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில் 83 பேருக்கு மார்பகத்தில் புற்றுநோய் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை அதிர்வொலி என்று சொல்லக்கூடிய ஒலியலைகளை மார்பகத்தின் மீது செலுத்தி மார்பகத்தின் கட்டி கெட்டியாக உள்ளதா அல்லது திரவம் நிறைந்துள்ளதா என்றும் கண்டறியப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்பின் அந்த கட்டிகளில் இருந்து ஒரு சில அணுக்களை எடுத்து நுண்ணோக்கியால் பரிசீலித்து மார்பக புற்றுறோய் உள்ளதா இல்லையா என்று கண்டறிந்து உறுதிப்படுத் தப்பட்டுள்ளது. அதில் 54 பேருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy