முகப்பு /திருச்சி /

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

X
குறைதீர்

குறைதீர் கூட்டம்

Trichy | திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 536 பேரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவித்தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 536 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நலச்சங்கம் மற்றும் தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ரூ.10,000 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்களை மாவட்ட வருவாய்அலுவலர் அபிராமி வழங்கினார்.

இந்நிகழ்வில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர்,  மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Trichy