ஹோம் /திருச்சி /

திருச்சியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் 4500 பெண்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது..

திருச்சியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் 4500 பெண்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது..

X
பெண்களுக்கு

பெண்களுக்கு வழங்கப்பட்ட மஞ்சப்பை

Trichy News : திருச்சி அரசு விழாவில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒரு பிளாஸ்டிக் பை மக்களால் சராசரியாக பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் தான். ஆனால் அவை மக்குவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் ஆகும். இதனால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு.

ஆனாலும் பல கடைகளில் இன்னும் பிளாஸ்டிக் பைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் கடை கடையாக சென்று சோதனை நடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க : எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் திராவிட மாடல் ஆட்சி தொடரும்.. முதலமைச்சர் அதிரடி பேச்சு!

பின்னர் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு அபராதமும் விதித்தனர். ஆனால் வியாபாரிகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இதை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை.

வியாபாரிகளுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டாலும் பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் புழக்கத்தில் தான் உள்ளது. இந்த காலகட்டத்தில் கொரோனா பரவியதால் பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது. இப்போது பிளாஸ்டிக் தடையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரம் காட்டி உள்ளது.

அதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் மீண்டும் ‘மஞ்சப்பை’ திட்டம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மகளிர் அனைவரும் ”மீண்டும் மஞ்சள் பை” என பொறிக்க பைகள் சுமார் 4500 பெண்களுக்கு கொடுக்கப்பட்டது.

செய்தியாளர் : மணிகண்டன் - திருச்சி

First published:

Tags: Local News, Trichy