ஹோம் /திருச்சி /

திருச்சியில் பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்க ட்ரோன்கள் அறிமுகம்

திருச்சியில் பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்க ட்ரோன்கள் அறிமுகம்

திருச்சி

திருச்சி

Trichy Disitrict News : சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 44-வது அறிவியல்ஆலோசனைக் குழு கூட்டம்நடைபெற்றது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 44-வது அறிவியல் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்க தமிழகத்தில் இனி ஆளில்லா விமானங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

வேளாண்மை அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் பற்றி மதிப்பீடு செய்து, வரும் காலத்திற்கான புதிய திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் பரிந்துரை செய்வதற்கான அறிவியல் ஆலோசனைக் குழு கூட்டம் ஒவ்வொரு வருடமும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான 44-வது அறிவியல் ஆலோசனைக் குழு கூட்டம் அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சீதாலட்சுமிஇணையதளம் வாயிலாக தலைமை ஏற்று துவக்கி வைத்தார்.

இதையும் படிங்க : திருச்சி மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்கள்

அப்போது அவர் பேசுகையில், ”அனைத்து பாசன அமைப்பை பெற்றிருக்கும் திருச்சி மாவட்டத்தின் தனித்தன்மை குறித்தும் இங்கு செயல்பட்டு வரும் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் செய்ய தொழில்நுட்பங்களும், காலநிலை குறித்த அறிவிப்புகளும் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

மேலும் அனைத்து விவசாயிகளும் ”உழவன்”செயலியை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பயறு வகைகளின் உற்பத்தியைப் பெருக்க குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து விரிவாக்க கல்வி இயக்குநர் முருகன் பேசுகையில், ”கால்நடைகள் மற்றும் கறவை மாடுகளுக்கு சரிவிகித உணவு அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் ஒற்றை சாளர விற்பனை மையத்தின் மூலம் தீவனப் பயிர்கள் விதை மற்றும் பிற உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் “ என கூறினார்.

பின்னர் பேசிய தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர்சுப்பிரமணியம், “பல்வேறு துறைகளில் இயங்கும் விவசாயிகள் நலத் திட்டங்களின் பயன், அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையும் வண்ணம் எடுத்துரைக்க வேளாண் அறிவியல் நிலையம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : திருச்சியில் வாழ்ந்துள்ள கற்கால மனிதர்கள்... தடயங்கள் கண்டெடுப்பு...

இந்திய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆ.பாஸ்கரன் பேசுகையில் “விவசாயத்தில் வேலை ஆட்கள் பற்றாக்குறை இருக்கும் இக்காலகட்டத்தில் ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்)முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து உரங்கள், பூச்சி கொல்லிகள், களைக்கொல்லிகள் ஆகியவற்றை தெளிக்க இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் கேட்டுக் கொண்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ப.முரளி அர்த்தநாரி இந்த கூட்டத்தில் விளக்கப்பட்ட பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

First published:

Tags: Agriculture, Local News, Trichy