முகப்பு /திருச்சி /

திருச்சி கண்காட்சியில் மாணவர்களை கவர்ந்த பாகுபலி காட்டெருமை!

திருச்சி கண்காட்சியில் மாணவர்களை கவர்ந்த பாகுபலி காட்டெருமை!

X
மாதிரி

மாதிரி படம்

Trichy News | புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலை மற்றும் அறிவியல் துறை சார்பில் 3 நாள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலை மற்றும் அறிவியல் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் மேலாண்மை கல்வித்துறை, மனித வாழ்வியல் புலத்துறை, வாழ்க்கை அறிவியல் துறை, கனித கணினி அறிவியல் துறை, ஊடகக்கல்வி மற்றும் ஆடை வரைகலை துறை மற்றும் மறுவாழ்வியல், நடத்தை அறிவியல் துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் காட்டெருமை ஒன்று தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் அறிவியல் சம்பந்தமான ரோபோடிக்ஸ் மற்றும் விஞ்ஞான சம்பந்தமான கண்காட்சி இடம்பெற்றிருந்தது. இயற்கை வளத்தை பாதுகாப்போம் என்ற கருத்தை ஆங்கிலத்துறை சார்பில் வரலாற்று கதைகளாக மாணவிகள் வேடம் அணிந்து வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதை ஏராளமான கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கண்டுகளித்தனர்.

First published:

Tags: Local News, Trichy