முகப்பு /செய்தி /திருச்சி / சிறுமிக்கு ஆசைவார்த்தை... நண்பர்களுடன் சேர்ந்து பாலிய வன்கொடுமை... இன்ஸ்டா காதலன் போக்சோவில் கைது..!

சிறுமிக்கு ஆசைவார்த்தை... நண்பர்களுடன் சேர்ந்து பாலிய வன்கொடுமை... இன்ஸ்டா காதலன் போக்சோவில் கைது..!

மணப்பாறை க்ரைம் - போக்சோவில் 2 பேர் கைது

மணப்பாறை க்ரைம் - போக்சோவில் 2 பேர் கைது

Trichy | சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முபாரக் அலி, ரியாஸ், சதாம் உசேன் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த சிறுமி ஒருவர் பணியாற்றி வந்தார். சமூக வலைதள செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இச்சிறுமி, தொடர்ச்சியாக வலைதளங்களை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி வேலைக்கு செல்வதாக சொல்லி, வீட்டை விட்டு கிளம்பிய சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

வழக்குப் பதிவு செய்த மணப்பாறை போலீசார், சிறுமியின் மொபைல் போன் தொடர்புகளை வைத்து விசாரணை நடத்தியதில், அவர் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. உடனே பெங்களூர் சென்ற தனிப்படை போலீசார் சிறுமியை மீட்டு, அவரை கடத்தி சென்ற 3 இளைஞர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தன. வேலூரை சேர்ந்த 32 வயதான முபாரக் அலி என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார். முபாரக் அலி பெங்களூருவில் உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலை செய்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார். காதலனின் வார்த்தைகளில் இருந்த வஞ்சகத்தை அறியாமல் சிறுமியும் அப்படியே நம்பியிருக்கிறார்.

கடந்த, 1ம் தேதி மணப்பாறைக்கு வந்து முபாரக் அலி, திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியை பெங்களூரு அழைத்து சென்று விடுதியில் ஒரு அறையில் அடைத்து வைத்து முபாரக் அலி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பின்னர் தனது நண்பர்களான வேலூரைச் சேர்ந்த ரியாஸ், சதாம் உசேன் ஆகியோரை விடுதி அறைக்கு அழைத்துள்ளார். ரியாஸ், சதாம் உசேன் ஆகியோரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் படிக்க... பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணக்கு டீச்சர்.. போக்சோவில் கைது

விடுதி அறையில் 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சிறுமியை மீட்டு திருச்சி அழைத்து வந்த போலீசார், அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

' isDesktop="true" id="968228" youtubeid="2oO9th_kYww" category="trichy">

top videos

    சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முபாரக் அலி, ரியாஸ், சதாம் உசேன் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களின் மீது பாலியல் வன்கொடுமை, கடத்தல், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று பேரையும் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.

    First published:

    Tags: Crime News, POCSO case, Sexual harassment, Trichy