முகப்பு /திருச்சி /

திருச்சி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை.. எந்தெந்த நாட்களில் தெரியுமா?

திருச்சி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை.. எந்தெந்த நாட்களில் தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

Trichy District News | பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களான சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாக்களை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் 2  நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத்தேர் திருவிழாவை முன்னிட்டு (18.04.2023) அன்று உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இவ்விடுமுறையினை ஈடு செய்யும் பொருட்டு (29.04.2023) சனிக்கிழமையன்று பணி நாளாக செயல்படும்.

இதே போன்று ஸ்ரீரங்கம்  அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற (19.04.2023) புதன்கிழமையன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற (13.05.2023) சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இத்தேர்த்திருவிழாவினை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனினும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

top videos
    First published:

    Tags: Local News, Trichy