ஹோம் /திருச்சி /

திருச்சி சமயபுரம் கோவிலில் 18 ஜோடிகளுக்கு திருமணம்..

திருச்சி சமயபுரம் கோவிலில் 18 ஜோடிகளுக்கு திருமணம்..

திருமண ஜோடிகள்.

திருமண ஜோடிகள்.

Tiruchirappalli News : திருச்சியில் இந்து அறநிலையத்துறை சார்பில் சமயபுரம் கோவிலில் 18 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும்  500 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்படும். இதற்கான செலவுகளை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களே ஏற்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 18 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துக்கொண்டு மணமக்களுக்கு திருமாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையினர் திருமணம் முடிந்த ஜோடிகளுக்கு கட்டில், மெத்தை, கிரைண்டர், மிக்ஸி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட 1 லட்சம் மதிப்புள்ள சீர் வரிசை பொருட்களை வழங்கினர். விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் மணமக்கள் உறவினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Hindu Temple