சிலம்பத்தில் சர்வதேச, தேசிய, மாநில மற்றும் மாவட்ட போட்டிகளில் பல பதக்கங்களை வெற்று முன்னாள் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிடம் பாராட்டு பெற்ற செயின் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி மோ.பி.சுகிதாவிற்கு தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை கலை இளமணி விருது திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமாரிடம் பெற்றவர். மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 76 நிமிடங்கள் இடைவிடாது சிலம்பம் சுற்றி இந்தியா புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர்.
அமெரிக்கா உலக தமிழ் பல்கலைக்கழகத்தில் இளம் டாக்டர் பட்டம் பெற்றவர். இங்கிலாந்து உலக சாதனை புத்தகம், அமெரிக்க உலக சாதனை புத்தகம், இந்தியா உலக சாதனை புத்தகம் மற்றும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் சாதனைகளை படைத்துள்ளவர் என்பது குறிப்பிடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy