திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலியாக உள்ள 119 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 119 நர்ஸ் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்புவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செவிலியர் பட்டயப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் அல்லது தமிழ் இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் படித்துள்ளவர்கள் வருகிற 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
விண்ணப்பங்களை நிர்வாக செயலாளர், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ்ரோடு, ஜமால்முகமது கல்லூரி அருகில் டி.வி.எஸ்.டோல்கேட், திருச்சி-620 020 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை அலுவலக நாட்களில் திருச்சி துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Job vacancies, Local News, Trichy