ஹோம் /திருச்சி /

108 திவ்ய தேச பெருமாள்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கனுமா?... திருச்சிக்கு வாங்க...

108 திவ்ய தேச பெருமாள்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கனுமா?... திருச்சிக்கு வாங்க...

திருச்சி

திருச்சி - 108 திவ்ய தேச பெருமாள் தரிசனம்

108 Divya Desam Darshan at Trichy | திருச்சியில் முதன்முறையாக புதிய பேருந்து நிலையம் அருகே வாசவி மஹாலில் 108 திவ்ய தேச பெருமாள்களின் தரிசனம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

108 வைணவ திருத்தலங்களை குறிக்கும் 108 திவ்ய தேசங்கள் ஆழ்வார்களால் பாடல் பெற்றதும், மங்களாசாசனம் செய்யப்பட்டதுமாகும். இதில் 105 திருத்தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாள நாட்டிலும் இருக்கிறது, மற்ற இரண்டு வானுலகில் இருப்பதாக கூறப்படுகிறது.

108 திவ்ய தேசங்களில் 27 திவ்ய தேசங்களில் சயன கோலத்திலும், 21 திவ்ய தேசங்களில் அமர்ந்த திருக்கோலத்திலும், 60 திவ்ய தேசங்களில் நின்ற திருக்கோலத்திலும் பெருமாள் காட்சியளிக்கிறார்.

பெருமாளின் மீது பக்தி கொண்ட ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் 108 திவ்ய தேச பெருமாள்களை தரிசித்து மகிழ வேண்டும் என்பது  கனவாகும். அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது என்பதால், அவர்களுடைய கனவை நனவாக்கும் வகையில் திருச்சியில் முதன் முறையாக ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருள செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் படிக்க: ‘பொன்னி நதி பாக்கணுமே’ - தஞ்சை கல்லணையும் அங்கே அழகாய் பொங்கிவரும் காவிரியின் சிறப்பும்!

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் நிலையம் அருகில் வாசவி மஹாலில் 108 திவ்யதேச பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

108 திவ்ய தேச பெருமாள்களையும் ஒரு சேர தரிசித்து அதன் பின்னர் திருப்பதி பெருமாள் போல மிகப் பிரம்மாண்டமான திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் மற்றும் பத்மாவதி தாயார் எழுந்தருள செய்து தீபாராதனை நடைபெற்றிட பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் போற்றும் பழையாறை - சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

எல்லாராலும் எல்லா திவ்ய தேசங்களுக்கும் சென்று வழிபடுவது என்பது இயலாத காரியம், அதேநேரம் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் 108 திவ்யதேச பெருமாளையும் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருப்பது, மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஒவ்வொருவரும் 10 முதல் 20 பெருமாள் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு இருக்கும் பட்சத்தில் 108 திவ்ய தேசங்களில் உள்ள பெருமாளையும் ஒரே நேரத்தில் மன நிறைவுடன் தரிசித்தது பெரும் பாக்கியத்தை அளித்து இருப்பதாகவும் பக்தர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்தனர். இந்த 108 திவ்ய தேச பெருமாள்களை தரிசனம் செய்ய 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கடுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy