Home /trichy /

காவிரி - கொள்ளிடம் ஆறுகளில் கரைபுரண்டோடும் வெள்ளம்... 1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

காவிரி - கொள்ளிடம் ஆறுகளில் கரைபுரண்டோடும் வெள்ளம்... 1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

காவிரி-கொள்ளிடத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம்...

காவிரி-கொள்ளிடத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம்...

Trichy Cauvery Kollidam Rivers | மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவு அதிகமாகி இருப்பதால், திருச்சி மாவட்டம் காவிரி-கொள்ளிடத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
கர்நாடக மாநிலத்தில் மீண்டும் மழை தீவிரமடைந்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் (KRS) அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரானது திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வந்து அங்கிருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் திறந்து விடப்படுகிறது. அதன்படி முக்கொம்பு மேலணைக்கு 1.30 ஆயிரம் கனஅடிநீர் வந்துகொண்டிருக்கிறது. இதில் காவிரி ஆற்றில் 35 ஆயிரம் கனஅடியும், கொள்ளிடத்தில் 95 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்:

முக்கொம்பு மேலணை, கொள்ளிடம் ஆற்றில் நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளதால், மண்ணச்சநல்லூர் வட்டம், நெ.2 கரியமாணிக்கம் ஊராட்சி, சிறுகாம்பூர் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அரிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானதை தொடர்ந்து, கரை அரிப்பை தடுத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முருகானந்தம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கொள்ளிடம் ஆறானது திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு இடையே பாய்ந்தோடி பரங்கிப் பேட்டைக்கு 5 கி.மீ. தெற்கில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இந்நிலையில், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Cauvery River, Local News, Trichy

அடுத்த செய்தி