முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / சாலையில் பண மழை பொழிந்த இளைஞர்கள் கைது..! வைரலான வீடியோ..

சாலையில் பண மழை பொழிந்த இளைஞர்கள் கைது..! வைரலான வீடியோ..

வைரலான வீடியோ..

வைரலான வீடியோ..

டெல்லி அருகே ஓடும் காரில் இருந்து சாலையில் போலி ரூபாய் நோட்டுக்களை வீசி போக்குவரத்துக்கு இடையூறு செய்த இரண்டு இளைஞர்களை குருக்ராம் போலீசார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

அண்மையில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடித்து ஓடிடி தளத்தில் ஃபார்சி என்ற வெப் சீரிஸ் வெளியானது. அந்த தொடர் மிகப் பிரபலமானதாகும். அந்த தொடரில் தங்களை துரத்தி வரும் காவல்துறையிடம் இருந்த தப்பிப்பதற்காக ஷாகித் கபூர் ஓடும் காரின் டிக்கியை திறந்துவிட்டு காருக்குள் இருக்கும் ரூபாய் நோட்டுக்களை கட்டுக்கட்டாக சாலையில் வீசுவார். இதே போல் ஒரு சம்பவம் டெல்லி அருகே நிகழ்ந்துள்ளது.

குருக்ராம்  டி.எல்.எஃப் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் சுரங்கம் ஒன்றிற்கு உள்ளே வெள்ளை நிற பலினோ கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் டிக்கியை திறந்த ஒரு இளைஞர் காருக்குள் இருந்து கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசியுள்ளார். பின்னால் வாகனங்களில் வந்தவர்கள் திகைத்துப் போய் தங்கள் வாகனங்களை நிறுத்தி ரூபாய் நோட்டுக்களை பொறுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்சியை பின்னால் வந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து அதை இணையத்திலும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகப் பரவ குருக்ராம் காவல்துறையினர் இந்த வீடியோ பதிவு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Read More : புல்லட்டில் சென்று பானி பூரி விற்பனை... மாத்தியோசித்த பி.டெக் பட்டதாரி பெண்... வைரலாகும் வீடியோ!

விசாரணையில், ரூபாய் நோட்டுக்களை காரில் இருந்து சாலையில் வீசி எறிந்தது ஜோராவர் சிங் கல்சி மற்றும் அவரது நண்பர் லக்கி கம்போஜ் என்பது தெரியவந்தது. இதில் கல்சி அதிக பின்தொடர்பவர்களுடன் யுடியூப்பில் பிரபலமானவராக விளங்குகிறார். அவரது யுடியூப் பக்கத்தில் பதிவிடவே இவ்வாறான செயலில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் சாலையில் வீசியது நிஜ பணம் கிடையாது. போலியான ரூபாய் நோட்டுகளாகும். சாலையில் காரின் டிக்கியை திறந்து வைத்துக் கொண்டு பயணிப்பது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். அதோடு பரபரப்பான சாலையில் ரூபாய் நோட்டுக்களை வீசி எறிந்து மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை திருப்பியதும் குற்றமாகும்.

இதை எல்லாம் கவனத்தில் எடுத்து கொண்ட ஹரியானா போலீஸார் இந்த இளைஞர்கள் மீது, சாலையில் ஆக்ரோஷமாக வாகனம் ஓட்டியது மற்றும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாக இருந்ததற்காக வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

யூடியூப்பில் பதிவு செய்யப்பட்ட இதுகுறித்த வீடியோவை சம்மந்தப்பட்ட இளைஞர் மூலமாகவே நீக்கியுள்ளனர். இருப்பினும், டெலிட் செய்வதற்கு முன்பாகவே இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விட்டது. யூடியூபில் லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக தாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே இது போன்ற காரியங்களில் பலரும் ஈடுபடுகிறார்கள். அப்படித்தான் லைக்குகளுக்கு ஆசைப்பட இந்த இளைஞர்கள் இப்போது கம்பி எண்ணுகிறார்கள். இந்த யூடியூபும் இணையதளமும் எப்படி எல்லாம் ஆட்டி வைக்கிறது பாருங்கள்

First published:

Tags: Delhi, Trending, Viral