பல்வேறு விதங்களில் மரணத்தின் எல்லை வரை சென்று வந்தவர்கள் பலருமே ஒரு குறிப்பிட்ட விதமான அனுபவத்தை தங்கள் பெற்றதாக விவரித்துள்ளனர். நம்முடைய சாதாரண வாழ்வில் இருந்து வேறுபட்டு கிட்டத்தட்ட ஒரு வித அமானுஷ்ய தன்மையை கொண்டுள்ளதாகவும் அவர்கள் நம்புகின்றனர். உயிர் பிரிந்தவுடன் அவர்கள் அனைவரும் மிகப்பெரிய சுரங்கம் போன்ற ஒரு இடத்திற்கு சென்றதாகவும் அந்த சுரங்கத்தின் முடிவில் மிகப்பெரிய ஒளி ஒன்றை கண்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.
தங்கள் உடலில் இருந்து வெளிவந்து அந்த சுரங்கத்தின் வெளிச்சத்திற்கு சென்று அந்த வெளிச்சத்தின் முடிவில் தங்களுடைய முன்னோர்கள் பலரையும் கண்டதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதில் ஆச்சரிய தக்க நிகழ்வு என்னவெனில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் பல்வேறு விதமான மக்களுக்கும் சொல்லி வைத்தது போல இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது என்பது தான் அனைவரையும் ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. படிக்காத பாமர மக்கள் முதல் வாழ்வில் உச்சம் தொட்ட மனிதர்கள் வரை பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் நடத்திய வாழ்வில் நேஷனல் அகாடமி சயின்ஸ் சார்பில் ஒரு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மரணிக்கும் தருவாயில் இருக்கும் இரண்டு நோயாளிகளின் மூளையின் செயல்பாட்டை கண்காணித்து அவர்களிடமிருந்து தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் மாரடைப்பினால் இறந்த 4 நோயாளிகளின் மரணத் தருவாயின் போது EEG மூலம் அவர்களை இந்த குழு கண்காணித்து அவர்களிடமிருந்து தரவுகளை பெற்றது. அந்த சமயத்தில் இந்த நால்வருமே கோமா நிலையில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனி எந்த விதமான மருத்துவ உதவியை அளித்தும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்ற நிலை வந்ததும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ உதவிகள் நீக்கப்பட்டு மரணிக்கும் தருவாயில் அவர்களது மூளையின் செயல்பாடு ஆனது கண்காணிக்கப்பட்டது.
Read More : 15% பேருக்கு இணைய சேவை கிடைக்க வாய்ப்பே இல்லை... படுமோசமான நிலையில் பாகிஸ்தான்..!
அதாவது மூளையின் இந்த பகுதியானது விழிப்படைகிறது என்றால் நோயாளி ஆனவர் எதையோ பார்க்கிறார் அல்லது எதையோ கேட்கிறார் அல்லது அவரது உடலில் எதையோ உணருகிறார் என்று பொருளாகும். இந்த நேரத்தில்தான் மேலே கூறியதைப் போல அனைவரும் வந்த சுரங்கப்பாதை போன்ற இடத்தையும் மிகப்பெரும் வெளிச்சத்தையும் காணும் நேரமாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாக உள்ளது. அதே சமயத்தில் மீதமுள்ள இரண்டு நோயாளிகளின் வாழ்வின் கடைசி நேரங்களில் அவர்களது மூளை மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டது. ஆனால் இந்த நினைவாற்றல்களை எழுப்பி விடும் மாற்றமானது இரண்டு நோயாளிகளுக்கு மட்டுமே ஏற்பட்டது மீதம் உள்ள இருவருக்கு ஏற்படவே இல்லை.
அதுபோலவே இதில் உள்ள மிகப் பெரிய சிக்கல் என்னவெனில் கிடைத்துள்ள தரவுகளின் படி நம்மால் நோயாளி எதையோ பார்த்து உள்ளார் என்பதை மட்டுமே உணர முடிகிறது. ஆனால் அவர் என்ன மாதிரியான காட்சியை பார்த்தார் என்பதை கூறுவதற்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. எதிர்காலத்தில் இது போல நூற்றுக்கணக்கான மனிதர்களிடமிருந்து தரவுகளை பெற்று பல்வேறு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும் யாரேனும் ஒருவர் மரணம் தருவாய்க்கு சென்று உயிர்பிழைப்பாராயின், அவர்களிடமிருந்து தகவல்களை திரட்ட முடியும் என்றும் அந்த குழுவின் நம்பிக்கையாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.