இப்போதெல்லாம் என்ன நடந்தாலும் அது தொடர்பான வீடியோ அல்லது புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்வது ஃபேஷனாகிவிட்டது. மற்றவாகளின் லைக்குகளையும் கமெண்டுகளையும் பெறுவதற்காகவே இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் சில நேரங்களில் இது கேலிக் கூத்தாகவும் மாறிவிடுகிறது. அப்படித்தான் இப்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவின் இளம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு கார் உரிமையாளர் என படத்தில் உள்ள நபரை கூறலாம். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி. பதின் பருவத்தையே முழுமையாக தாண்டாத இந்த சிறுவன் தான் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்காக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 400டி சொகுசு காரை வாங்கி இருக்கிறார். இந்த காரின் விலை 1.29 கோடி ரூபாய். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இத்தகைய அதிக விலை கொண்ட காரைத் தான் அந்த சிறுவன் வாங்கி இருக்கிறார்.
அவருடைய குடும்பத்தில் வேறு யாரேனும் இது போன்ற காஸ்ட்லி சொகுசு காரை வைத்திருக்கிறார்களா என்றால் அப்படி எதுவும் தெரியவில்லை. சிறுவன் மட்டுமே அவருடைய பாதுகாப்பு நபர்களுடன் வந்து காரை டெலிவரி எடுத்திருக்கின்றார். அதேபோல், காரை வாங்குவதற்கான ஆவணங்களில் அவரே கையெழுத்திட்டிருக்கின்றார். இதுதவிர, சிறுவனின் பெயரை போட்டே மெர்சிடிஸ் கார் விற்பனையாளர்களும் அவரை வரவேற்று, காரை டெலிவரி கொடுத்திருக்கின்றனர். இந்த சம்பவத்தின் அனைத்து காட்சிகளும் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த வீடியோவை ஒரு சிலர் பாராட்டினாலும் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.
Read More : மொபைல் தொலைந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்.. ஈஸியா கண்டுபிடிக்கலாம்..!
இதேபோல், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பதினான்கே வயதான ரிவா அரோரா ஆடி க்யூ3 சொகுசு காரை பரிசாக பெற்றார். குழந்தை நட்சத்திரமான ரிவா அரோராவிற்கு இந்த காரை அவரது தாயே பரிசாக வழங்கினார். சொகுசு காரின் மதிப்பு ரூ. 44.89 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரை பெற்றதன் வாயிலாக இந்தியாவின் முதல் மிகவும் இளமையான க்யூ3 சொகுசு கார் உரிமையாளர் என்கிற புகழுக்குரியவராக ரிவா அரோரா மாறினார்.
இந்த நிலையிலேயே சுமார் 1.29 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்ப காரின் இளம் உரிமையாளராக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ரெட்டி மாறி இருக்கின்றார். இவரிடம் லைசென்ஸ் இருக்குமா?, இல்லையா? என்றுகூட தெரியவில்லை. பதினெட்டு வயது கூட நிரம்பாதவராக இருக்கின்றார். ஆனால் அதற்குள்ளாக காரை அவரே டெலிவரி பெற்று ஓட்டிச் சென்றிருக்கின்றார். இதை முன்னிறுத்தியே நெட்டிசன்கள் சிறுவனை கலாய்க்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்த காரில் 3 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 326 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 900 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மோட்டாருடன் இணைக்கப்பட்டு உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.