முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ரூ.44 லட்சத்திற்கு விற்கப்படும் தண்ணீர்... அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ரூ.44 லட்சத்திற்கு விற்கப்படும் தண்ணீர்... அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

உலகின் மிக விலையுயர்ந்த தண்ணீர்...

உலகின் மிக விலையுயர்ந்த தண்ணீர்...

உலகின் இந்த மிக விலை உயர்ந்த நீரானது திட நிலையில் உள்ள 24 கேரட் தங்கத்தால் ஆனது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பணக்கார வாழ்க்கையை வித்தியாசமாக வாழ சிலர்  விரும்புகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே விலை உயர்ந்த பொருட்களாக இருக்கும். அந்த வகையில், உலகில் உள்ள ஒரு சில பணக்காரர்கள் உலகின் மிக விலை உயர்ந்த தண்ணீரை பருகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அக்வா டி கிரிஸ்டலோ டிரிபுட்டோ ஏ மோடிக்லியானி (Acqua di Cristallo Tributo a Modigliani) என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிக விலை உயர்ந்த நீரானது ரூ.45 லட்சம் மதிப்பிலானது. உலகின் மிக விலை உயர்ந்த வாட்டர் பாட்டில் என்ற கின்னஸ் சாதனையை இந்த நீரானது 2010-ஆம் ஆண்டு நிகழ்த்தியது. இந்த தண்ணீர் இத்தனை விலை உயர்ந்ததாக இருப்பதற்கான காரணம் அதன் பேக்கேஜிங் ஆகும்.

750 ml பாட்டிலானது திட நிலையில் உள்ள 24 கேரட் தங்கத்தால் ஆனது. உலகின் பில்லியனர்கள் பலர் இந்த தண்ணீரை அருந்தி வருவதாக கூறப்படுகிறது. விலை உயர்ந்த இந்த தண்ணீரில் 5g அளவு 24 கேரட் தங்கம் கலக்கப்பட்டுள்ளது. இது அந்த நீருக்கு காரத்தன்மையை சேர்க்கிறது. அதோடு அக்வா டி கிரிஸ்ட்டிலோவின் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள தண்ணீரானது உலகின் மூன்று முக்கிய வெவ்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரால் ஆனது என்பது இதன் தனிச்சிறப்பு.அந்த வகையில் ஒரு பகுதி நீரானது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு நீரூற்றிலிருந்து எடுக்கப்பட்டது, மற்றொன்று ஃபிஜியில் உள்ள ஒரு நீரூற்றிலும், மூன்றாவது பகுதி ஐஸ்லாந்தில் உள்ள பனிப்பாறைகளிலிருந்தும் எடுக்கப்பட்டது.

சராசரியாக நாம் பருகும் குடிநீரை காட்டிலும் இந்த நீர் அதிக அளவு ஆற்றலை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பத்து வருடங்களுக்கு முன்னதாக, மார்ச் 4 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டில், அக்வா டி கிரிஸ்டலோ டிரிபுட்டோ ஏ மோடிக்லியானியின் ஒரு பாட்டில் 60 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இது இந்திய மதிப்பு ரூ.49 லட்சம் ஆகும். மிகவும் பிரத்தியேகமான அக்வா டி கிரிஸ்டலோ டிரிபுட்டோ ஏ மோடிக்லியானி என்பது ஃபெர்னாண்டோ அல்டாமிரானோ என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

Read More : தோண்ட தோண்ட எலும்புகூடுடன் வந்த தங்க நகைகள்… அதிர்ந்து போன ஆராய்ச்சியாளர்கள்!!

உலகின் மிகவும் விலை உயர்ந்த வாட்டர் பாட்டிலான ஹென்றி IV டூடோக்னான் ஹெரிடேஜ் கொக்னாக் (Henri IV Dudognon Heritage Cognac) என்பதையும் இவர் வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அக்வா டி கிரிஸ்டலோ டிரிபுட்டோ ஏ மோடிக்லியானி மற்றும் ஹென்றி IV டூடோக்னான் ஹெரிடேஜ் கொக்னாக் தவிர, உலகின் மிக உயர்ந்த மற்றொரு தண்ணீரும் உள்ளது. அது கோனா நிகாரி (Kona Nigari) என்று அழைக்கப்படுகிறது. இது ஜப்பானை சேர்ந்த தண்ணீர் ஆகும். இது கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடிகள் ஆழமாக சென்று எடுக்கப்பட்ட தண்ணீர். இந்த நீரில் ஒரு சில தாதுக்கள் காணப்படுகின்றன. இந்த தாதுக்கள் உடல் எடையை குறைக்க பயனுள்ளதாக இருக்கிறது.

இந்த தண்ணீரை பருகுவது ஒருவரை ஆற்றல் மிக்கவராக மாற்றும். அதோடு இந்த நீரை பருகினால் சருமம் பளபளப்பாகும். இந்த நீரின் 750 ml பாட்டில் 402 அமெரிக்க டாலர்கள், அதாவது 33,000 ரூபாய் ஆகும். மொத்த வாட்டர் பாட்டில் 44 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடலுக்கு அடியில் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய எலக்ட்ரோலைட்டுகளை இந்த நீர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Trending, Viral