முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / நீர் மேலாண்மையைத் துரிதப்படுத்துவோம்... உலக தண்ணீர் தினம் இன்று !

நீர் மேலாண்மையைத் துரிதப்படுத்துவோம்... உலக தண்ணீர் தினம் இன்று !

உலக தண்ணீர் தினம்

உலக தண்ணீர் தினம்

நீரின் நிலையான மேலாண்மை என்பது தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக உலகின் நீர் ஆதாரங்களை திறம்பட பயன்படுத்துதலே ஆகும்.

  • Last Updated :
  • Chennai |

மார்ச் 21 உலக காடுகள் தினமாக கொண்டாடப்படுவதை அடுத்து மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது.’ நீரின்றி அமையாது உலகு‘ என்றார் திருவள்ளுவர். இந்த உலகில் உள்ள எந்த உயிரினமும் நீர் இல்லாமல் வாழ முடியாது. உணவு இல்லாமால் கூட சில நாட்கள் தாக்கு பிடிக்கலாம் ஆனால் நீர் இல்லாமல் ஒரு நாளை கடத்துவதே பெரிது.

பூமிப்பரப்பின் 70% நீரால் தானே மூடப்பட்டுள்ளது. பின்னர்  தண்ணீருக்கு என்ன பஞ்சம் வரப்போகிறது என்று நீங்கள் யோசிக்கலாம். தண்ணீர் குடிப்பது என்றால் எந்த நீரையும் குடித்துவிட முடியாது. நன்னீராக இருந்தால் தான் அதை பருக முடியும். கடல் நீரை எடுத்து சிறிது குடிப்பதற்குள் தொண்டை கவ்விவிடும்.

நன்னீர் என்று எடுத்துக்கொண்டால் பூமி பரப்பில் மொத்தமே 3% தான் உள்ளது. இந்த குடிநீரில் கிட்டத்தட்ட 65% பனிப்பாறைகளாக உறைந்துள்ளது. அதுபோக நதிகள், ஓடைகள், ஏரிகள் மற்றும் அணைகளில் 1% நன்னீர் தேங்கி நிற்கும். அது போக, நிலத்தடி நீராக  0.3% உள்ளது. அதிகப்படியான நன்னீர் இருக்கும் பனிப்பாறைகள் காலநிலை மாற்றத்தால் வேகமாக உருகி கடல் நீருடன் கலந்து வருகிறது. அதனால் மீதம் இருக்கும் நீரை காப்பாற்றிக்கொள்ளவேண்டிய தேவை அதி-அவசியமாக மாறி வருகிறது.

நன்னீரின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நன்னீர் வளங்களின் நிலையான மேலாண்மையை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தேதியில் அதிகரித்து வரும் நீர் தேவையையும், அதை வீணாக்காமல் சரியாக பயன்படுத்து முறைகளையும் இந்த நாளில் ஆராய்ந்து மக்களுக்கு சொல்லி வருகின்றனர்.

தண்ணீர் தின வரலாறு:

உலக தண்ணீர் தினம் முதன்முதலில் 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (UNCED) போது முன்மொழியப்பட்டது. 1993 ஆம் ஆண்டு ஐநா மார்ச் 22 ஆம் தேதியை உலக நீர் தினமாக நியமித்த பின்னர் இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.

முக்கியத்துவம்

உலக தண்ணீர் தினம் நீரின் நிலையான மேலாண்மைக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வாழ்க்கைக்கு நீரின் முக்கியத்துவத்தையும், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக இந்த விலைமதிப்பற்ற வளத்தை நிலையான முறையில் நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தையும் வரும் சந்ததியினர் பயன்பாட்டிற்கு கொஞ்சம் விட்டுச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்தையும் நமக்கு நினைவூட்டும் ஒரு நிகழ்வாக இது அமைகிறது.

தீம்

top videos

    நீரின் நிலையான மேலாண்மை என்பது தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக உலகின் நீர் ஆதாரங்களை திறம்பட பயன்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் ஆகும்.

    First published:

    Tags: World Water day