முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 2 காதலர்களுடன் வளைகாப்பு கொண்டாடிய பெண்... குழந்தைக்கு யார் தந்தை என்பதில் குழப்பம்!

2 காதலர்களுடன் வளைகாப்பு கொண்டாடிய பெண்... குழந்தைக்கு யார் தந்தை என்பதில் குழப்பம்!

2 காதலர்களுடன் கர்ப்பிணி

2 காதலர்களுடன் கர்ப்பிணி

அந்தப் பெண் இருவருடனும் டேட்டிங் செய்தது இரு ஆண்களுக்கும் தெரியும் என்று தெரிகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்ப்பமாக இருப்பது எல்லா பெண்ணுக்கும் மிகவும் இனிமையான அனுபவம். இந்த அனுபவத்தை அந்த பெண் முதலில் தனது கணவரிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புவார்.

குழந்தைக்கு தாயின் அன்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தந்தையின் அன்பும் முக்கியம். ஆனால் தன் குழந்தைக்கு தந்தை யார் என்று தெரியாத பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? ஆம், அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலான வீடியோவில், அந்த பெண்ணுடன் இரண்டு ஆண்கள் இருக்கிறார்கள். மூவரும் மிகவும் ஜாலியாக நடனமாடுகிறார்கள். அந்த பெண் கருவுற்றிருப்பதால் மூவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உண்மையில், அந்தப் பெண் வீடியோவில் தன்னுடன் இருக்கும் இருவருடனும் உறவு வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தைக்கு யார் தந்தை என்பதில் அவருக்கு குழப்பம். ​​​​அந்தப் பெண் இருவருடனும் டேட்டிங் செய்தது இரு ஆண்களுக்கும் தெரியும் என்று தெரிகிறது.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. இதற்கு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது அவருடைய வாழ்க்கை என்று ஒருவர் எழுதினார். பரஸ்பர புரிதலுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பலர் கேலியும் செய்தனர். டிஎன்ஏ சோதனையில் இருவரும் குழந்தைக்கு தந்தையாக இல்லை என்றால் என்ன செய்வது? என்ற ரீதியிலும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published: