முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கண்களை துணியால் கட்டிக்கொண்டு கணவரை சரியாக கண்டுபிடித்து அசத்திய பெண்... பாராட்டித் தள்ளும் நெட்டிசன்கள்!

கண்களை துணியால் கட்டிக்கொண்டு கணவரை சரியாக கண்டுபிடித்து அசத்திய பெண்... பாராட்டித் தள்ளும் நெட்டிசன்கள்!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

இணையத்தில் பெண் ஒருவர் தனது கணவரை கண்களை துணியால் மூடிக்கொண்டு அடையாளம் கண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கணவன், மனைவிக்கு இடையேயான புரிதல் மற்றும் அன்யோன்யம் அவர்களின் சிறு சிறு செயல்களில் கூட அழகாக வெளிப்படும். அதை டெஸ்ட் செய்வதற்காக ஜாலியாக சில விளையாட்டுகள் வைக்கப்பட்டு அதன் இணையத்தில் டிரெண்டாவதை நாம் பார்த்திருப்போம். அப்படி ஒரு ஜாலியான வீடியோ ஒன்று இணையத்தில் வைராலகி வருகிறது.

இந்த வீடியோவை until the next meme என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் மனைவிக்கு ஒரு டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு ஹாலில் பல ஆண்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண் கண்ணை துணியால் கட்டி வைத்து நிறுத்தப்பட்டுள்ளார். கூட்டத்தில் வரிசையாக நிற்கும் ஆண்கள் அந்த பெண்ணின் கணவரும் உள்ளார்.

அந்த பெண் துணியை அகற்றாமல் தனது கணவர் யார் என கண்டுபிடிக்க வேண்டும். இது தான் போட்டி. தனது கணவரை கண்டுபிடிக்க பெண் கையாண்ட யுக்திதான் அனைவரையும் வியக்க வைத்து டிரெண்டாகி வருகிறது. கண்கள் கட்டப்பட்ட அந்த பெண் தனது எதிரில் நிற்கும் நபரின் உயரத்தை கை மூலம் அடையாளம் காண்கிறார். தனது கணவர் அருகே வந்ததும் உயரத்தை சரியாக இருப்பதை தெரிந்து கொண்டு, கண்ணை கட்டிக்கொண்டே அவரை கண்டுபிடித்தார். சுற்றி இருப்பவர்கள் அனைவரும் கைத்தட்டி பெண்ணை பாராட்டினர்.


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வேகமாக பரவி வருகிறது. இந்த ஜோடி தான் மிகச் சிறந்த ஜோடி. இந்த பெண் தான் இந்தாண்டின் சிறந்த மனைவி 'wife of the year' இணையத்தில் பலரும் கமெண்ட் செய்து பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ ஐந்து நாள்களிலேயே 43 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Husband Wife, Instagram, Viral Video