முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கொழுகொழு கன்னம் வேண்டாம்.. கணவனுக்காக பட்டினி கிடந்து எலும்புதோலுமாய் மாறிய மனைவி.. ஷாக் சம்பவம்!

கொழுகொழு கன்னம் வேண்டாம்.. கணவனுக்காக பட்டினி கிடந்து எலும்புதோலுமாய் மாறிய மனைவி.. ஷாக் சம்பவம்!

உடல் எடையை 22 கிலோவாக குறைத்த பெண்

உடல் எடையை 22 கிலோவாக குறைத்த பெண்

ரஷ்யாவில் கொழு கொழுவென இருந்த பெண் ஒருவர் தனது உடல் எடையை வெறும் 22 கிலோவாக குறைத்து எலும்பும் தோலுமாக காட்சி அளிக்கிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaMoscowMoscow

கணவர் தனது தோற்றம் குறித்து கூறிய கருத்தால் ரஷ்யாவில் ஒரு பெண் தனது உடல் எடையை விபரீதமான முறையில் குறைத்து எலும்பும் தோலுமாக உள்ளார். பொதுவாக before and after என்ற டிரெண்டில் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாவது வழக்கம். இது போன்ற புகைப்படங்களில், before-இல் இருந்த நபர் முன்பு நான் இப்படி இருந்தேன். பின்னர் கடின முயற்சியால் இந்த அளவுக்கு மேம்பட்டு இருக்கிறேன் என்று திருப்தியுடன் after புகைப்படத்தை போட்டு மகிழ்ச்சியுடன் ஷேர் செய்வார்.

ஆனால், ரஷ்யாவிலோ ஒரு பெண் கடினமான முயற்சி செய்து தனது தோற்றத்தை மோசமாக மாற்றியுள்ளார். அவர் பெல்கிரேடில் வசிக்கும் யானா பாப்ரோவா என்ற பெண். இவர் கொழு கொழுவென பூசிய உடல் தோற்றம் பெண்ணாக தான் இருந்தார். இருப்பினும் கல்லூரி காலத்தில் இருந்தே உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த பெண்ணுக்கு இருந்துள்ளார்.

இந்நிலையில், இவருக்கு திருமாணகியுள்ளது. பெண்ணின் கணவரும் யானாவின் தோற்றம் குறித்து கூறிய கமெண்ட் அவரை உசுப்பிவிட்டுள்ளது. உனது கண்ணம் கொழு கொழுவென பருமனாக உள்ளது என்றுள்ளார். இதை கேட்டதும் தனது உடல் எடையை குறைத்தே தீர வேண்டும் என முடிவெடுத்த யானா, யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத டயட்டில் இருந்துள்ளார். வெறும் பிஸ்கட், டீ, சாக்லேட் போன்றவற்றை மட்டுமே சாப்பிட்டு தீவிர உடற்பயிற்சி செய்த யானா, படிப்படியாக உடல் எடையை குறைத்து தற்போது எலும்பும் தோலுமாக இருக்கும் தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

5.2 அடி உயரம் கொண்ட யானாவின் உடல் எடை என்னவென்று கேட்டபவருக்கு ஒரு கனம் மயக்கமே வந்துவிடும். ஆம், தற்போது யானாவின் உடல் எடை வெறும் 22 கிலோ தான். இவர் இப்படி மோசமாக உடல் எடையை குறைத்ததால் வேலை பறிபோனது. கணவரும் யானாவை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதையும் படிங்க: 9 to 5 வேலை வேஸ்ட்.. இது தான் பெஸ்ட்.. பணம் சம்பாரிக்க அட்வைஸ் தரும் 22 வயது கோடீஸ்வரர்!

இந்த விஷயம் எல்லாம், ரஷ்யாவின் NTV நடத்தும் டிவி ஷோவில் பங்கேற்று யானா பேட்டி அளித்து உலகிற்கு பகிர்ந்து கொண்டார். யானாவின் பேட்டியை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷோ ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்டுடியோவில் இருந்து நேரடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவருக்கு மனநல சிகிச்சையும் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

First published:

Tags: Russia, Viral News, Weight loss