முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 18 ஆண்டுகளாக ஜீன்ஸை துவைக்காத பெண்.. இணையத்தில் நடந்த காரசார விவாதம்!

18 ஆண்டுகளாக ஜீன்ஸை துவைக்காத பெண்.. இணையத்தில் நடந்த காரசார விவாதம்!

வைரலாகும் போஸ்ட்..!

வைரலாகும் போஸ்ட்..!

ஒரு பெண் ஒருவர், கடந்த 18 ஆண்டுகளாக அவர் அணிந்திருந்த ஜீன்ஸை துவைக்கவே இல்லை என்றும் இதனால் எவ்வித பிரச்சனையும்  இதுவரை ஏற்படவில்லையாம்..

  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்குமான ஆடைகளில் ஒன்றாகிவிட்டது ஜீன்ஸ். ஆனால் இந்த ஜீன்ஸை அதிக நேரம் அணிவதன் மூலம் வியர்வை உறிஞ்சப்படாமல், அப்படியே வியர்வை உடலில் தங்கிவிடும். மேலும் அதிகப்படியான கிருமிகள் உடலில் தங்கிவிடுவதால் பல சரும நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வியர்வையால் உடலில் வேறு பிரச்சனைகளும் அதிகளவு ஏற்படும் என்பதால் அதிக நேரம் ஜீன்ஸை நீங்கள் அணிய கூடாது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் ஒரு பெண் ஒருவர், கடந்த 18 ஆண்டுகளாக அவர் அணிந்திருந்த ஜீன்ஸை துவைக்கவே இல்லை என்றும் இதனால் எவ்வித பிரச்சனையும் இதுவரை ஏற்படவில்லையாம்.. எப்படி தெரியுமா? இதோ இங்கே தெரிந்துக்கொள்வோம்…

18 ஆண்டுகளாக துவைக்காத ஜீன்ஸை அணிந்திருந்த பெண்:

இங்கிலாந்தில் ஹெல் பகுதியைச் சேர்ந்த சான்ட்ரா வில்லிஸ் என்ற பெண், தான் ஜீன்ஸ் வாங்கிய ஜீன்ஸை 18 ஆண்டுகளில் ஒருமுறை கூட இதுவரை துவைக்கவில்லை என தெரிவித்திருந்தது சோசியல் மீடியாவில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. மேலும் தான் எப்படி வாங்கினேனோ? அப்படியே இதுவரை உள்ளது எனவும் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

இந்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், நானும் ஜீன்ஸ் வைத்துள்ளேன் என்றும் இது என்னுடைய விருப்பமான ஜீன்ஸ் என்பதால் ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் அணிந்துக்கொள்கிறேன் என்றும், எனக்கு எவ்வித பிரச்சனையும் இதுவரை ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Read More : இப்படி ஒரு அதிசயமா? பாறையில் முளைக்கும் குட்டி பாறைகள்.. விஞ்ஞானிகள் சொன்ன ஆச்சரிய விளக்கம்!

மற்றொரு பயனர் ஒருவர், நான் ஒருமுறை மட்டுமே ஜீன்ஸை அணிந்திருந்தேன் என்றும், அதில் ஒருவித கறையும், பயன்படுத்திய வாசனை திரவியமும் உள்ளது. இதனால் பல முறை இதை துவைத்துள்ளேன் என்றார். முன்னதாக இந்த ஜீன்ஸ் அணிவதன் மூலம் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதையும் அவர் தெரிவித்துள்ளார் மேலும்"நான் அடிக்கடி அவற்றை அணியாததற்குக் காரணம், அவற்றில் நிறைய ஜோடிகளைக் கொண்டிருப்பதால் தான் என்று கூறியுள்ளார்.

top videos

    சோசியல் மீடியாவில் மாறி மாறி கருத்துக்கள் வெளிவருவதைப் பார்த்த சான்ட்ரா, தன்னுடைய கருத்தை தெளிவுபடுத்தும் வகையில் ஒரு மெசேஜ் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதில், "நான் அவற்றைத் துடைக்கிறேன் என்றும், நான் அவற்றை நேராக கழுவுவதில்லை என கூறியுள்ளார். 18 ஆண்டுகளாக ஜீன்ஸ் துவைக்கவில்லை என்பதை வைத்து சோசியல் மீடியாவில் வெளியாகி, பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது

    First published:

    Tags: Trending, Viral