தனது வாழ்க்கை துணையிடம் காதலை வெளிப்படுத்த பலரும் பல்வேறு விதமான முயற்சிகளை செய்வதை பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். இங்கு ஒரு பெண் தனது கணவர் மீதான காதலை வெளிப்படுத்த அவர் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கிங் மேகர் டாட்டூ ஸ்டுடியோ என்ற டாட்டூ பார்லருக்கு பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் தனது கணவரின் பெயரை நான் டாட்டூவாக பச்சைக்குத்திக் கொள்ள விரும்புகிறேன் என்றுள்ளார்.
பொதுவாக கைகள், கால்கள், முதுகு, மார்பு போன்ற உடல் பகுதிகளில் தானே பச்சைக் குத்திக்கொள்வர்கள். இந்த பெண்ணோ, தனது கணவரின் பெயரை நெற்றியில் பச்சைக் குத்திக்கொள்ள விரும்பியிருக்கிறார். டாட்டூ பார்லர் ஊழியர் ஒரு பேப்பரில் அந்த பெண்ணின் கணவரின் பெயரான சதீஷ் என்பதை எழுதி இந்த font ஓகேவா எனக் கேட்க பெண் சம்மதம் தெரிவிக்கிறார்.
பின்னர் ஊசியை வைத்து பெண்ணுக்கு கணவரின் பெயரான சதீஷ் என்பதை நெற்றியில் டாட்டூவாக பச்சை குத்துகிறார்கள். இந்த வீடியோவை அந்த அந்த டாட்டூ பார்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இது தற்போது வைரலாகி வருகிறது. 1.25 கோடி பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். 2.6 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
View this post on Instagram
அதேவேளை, அந்த பெண் ஓவர் ரியக்ஷன் தருகிறார், இப்படித்தான் காதலை காட்ட வேண்டும் என்ற தேவையில்லை போன்ற கமெண்டுகளையும் பலர் பதிவிட்டு வருகின்றனர். டிஸ்லைக் பட்டன் வையுங்கள் நான் வீடியோவை டிஸ்லைக் செய்ய விரும்புகிறேன் என்றும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Husband Wife, Tattoos, Viral Video