முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / காதலரின் பெயரை கேட்காமலேயே காதலித்த பெண்... காரணத்தை கேட்டால் சிரிப்பீர்கள்...!

காதலரின் பெயரை கேட்காமலேயே காதலித்த பெண்... காரணத்தை கேட்டால் சிரிப்பீர்கள்...!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தன்னுடைய முன்னாள் காதலரின் பெயரை, அவருடன் 4 மாதங்கள் டேட்டிங் செய்த பிறகு தான் நான் தெரிந்து கொண்டேன் என பெண் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

“அவுக பேர எப்படி நா என் வாயால சொல்லுவேன்’’ என்று நம்முடைய பாட்டி சொல்வதை கேட்டிருப்பீர்கள் அல்லது பழைய திரைப்படங்களில் இதுபோன்றதொரு காட்சியை பார்த்திருப்பீர்கள். ஆனால், இப்போதெல்லாம் காலம் வெகுவாக மாறி விட்டது. ஆணும், பெண்ணும் சமம் என்பதை உணர்ந்து கணவரின் பெயரை மனைவி உரிமை சொல்லி அழைக்கும் காலம் இது.

ஆனால், இப்படியொரு நவீன உலகில் தன் காதலனின் பெயரை கேட்க தயக்கமாக இருந்தது என்று பெண் ஒருவர் குறிப்பிடுகிறார். கேட்பதற்கு இது ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தாலும், இறுதிவரை அந்தப் பெண் அதை நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை என்ற தகவல் அதைவிட அதிர்ச்சியாக இருக்கிறது. காதலரின் பெயரை தானே தேடி கண்டுபிடித்து தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் இருந்த அந்தப் பெண், இறுதியாக அவரது கார் இன்சூரன்ஸ் ஆவணத்தின் மூலமாக தெரிந்து கொண்டாராம்.

இதுகுறித்து ரெட்டிட் சமூக வலைதளத்தில், அந்தப் பெண் பகிர்ந்து கொண்ட செய்தியில், “என்னுடைய முன்னாள் காதலரின் பெயரை, அவருடன் 4 மாதங்கள் டேட்டிங் செய்த பிறகு தான் நான் தெரிந்து கொண்டேன். பேட்ரிக் அல்லது ரிச்சர்டு, இதில் அவருடைய பெயர் என்ன என்பதை உறுதி செய்ய இயலாமல் இருந்த காரணத்தால், நான் அவரை பெயர் சொல்லி அழைக்கவே இல்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : 19 மாடி கட்டிடத்தின் நடுவில் செல்லும் ரயில்.. வியக்க வைக்கும் வீடியோ!

மேலும், “இண்டர்நெட், ஃபேஸ்புக் போன்றவை வருவதற்கு முன்பாக நடந்த சம்பவம் இது. ஒருநாள் நீண்ட தொலைவுக்கு அவருடன் காரில் சென்றிருந்தபோது, அந்தக் காரின் இன்சூரன்ஸ் ஆவணத்தை பார்த்து அவரது பெயரை தெரிந்து கொண்டேன்’’ என்று தெரிவித்துள்ளார். பெயரை தெரிந்து கொண்ட பின் சில காலம் வரையிலும் காதல் தொடர்ந்த நிலையில், அதன் பின்னர் அவர்கள் நிச்சயித்து திருமணம் செய்து கொண்டார்களாம். எனினும், சில ஆண்டுகளுக்குப் பிறகு காதல் திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்ட நிலையில் விவாகரத்து பெற்றுவிட்டனர். இப்போது அந்த முன்னாள் கணவரை பற்றி பேசும்போது வெவ்வேறு பட்டப் பெயர்களை சொல்லி குறிப்பிடுவதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இவரது பதிவு, சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ள நிலையில், பலரும் தங்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட இதேபோன்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். பெயரை கேட்காமலேயே நீண்டநாள் காதலில் இருந்தது குறித்தும், சில நண்பர்கள் எப்போதுமே தவறுதலாக வேறொரு பெயரில் தங்களை அழைக்கின்றனர் என தெரிய வந்தாலும், அதை தடுத்ததில்லை என்றும் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

இதுகுறித்து பெண் ஒருவர் பகிர்ந்து கொண்ட அனுபவத்தில், “என் தோழியின் பெயர் சுஸானே. ஆனால், என் கணவர் அந்தப் பெண்ணை இரண்டு ஆண்டுகளாக நான்சி என்றே அழைத்து வந்தார். அதை நினைத்து நாங்கள் நிறைய சிரித்து மகிழ்ந்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Love, Trending, Viral