முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / “ஆண்கள் இருந்தால் தான் உலகம் அழகாக இருக்கும்..” - கணவருக்கு காதல் பதிவு எழுதிய மனைவி...!

“ஆண்கள் இருந்தால் தான் உலகம் அழகாக இருக்கும்..” - கணவருக்கு காதல் பதிவு எழுதிய மனைவி...!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இல்வாழ்க்கைக்கு வந்து 17 ஆண்டுகள் கழித்து தனது கணவருக்கு பிரியத்துடன் காதல் பதிவை மனைவி எழுதியுள்ளார்.

  • Last Updated :
  • Delhi, India

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற சொல் நாம் அறிந்ததே. எவ்வளவு முயன்றாலும் மனதில் இருந்து பெருகி கொட்டும் அன்பை யாரலும் கட்டுப்படுத்த முடியாது தானே. தாய், தந்தை, சகோதரர் போன்ற உறவுகள் பிறப்பின் மூலமாகவே வந்து சேர்ந்து நம் மீது நேசத்தை பொழிவார்கள். ஆனால், நண்பர்களும், வாழ்க்கை துணையான மனைவியும் தான் ரத்த பந்தமாக இன்றி வாழ்வை வசந்தமாக்கும் உறவுகள்.

இங்கு ஒரு மனைவி இல்வாழ்க்கைக்கு வந்து 17 ஆண்டுகள் கழித்து தனது கணவருக்கு பிரியத்துடன் காதல் பதிவை எழுதியுள்ளார். இது quora இணையதளத்தில் பரவி இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் தனது பதிவில், "இந்த உலகில் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களில் ஆண்களும் உண்டு. இவர்கள் தனது இளமை காலத்தை மனைவி மற்றும் குழந்தைகளுக்காக தியாகம் செய்கின்றனர்.

ஒவ்வொரு ஆணும் தங்கள் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்காக கடினமாக உழைப்பதையே தாரக மந்திரமாக கொண்டுள்ளனர். இத்தகைய கடினங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் அவர்களுக்கு அழுத்தத்தை தவிர வேறு எதையும் குடும்பத்தார் கொடுப்பதில்லை. அவர்கள் சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியே சென்று ஆசுவாசம் செய்து கொண்டாலும், அவர்கள் வீட்டை பற்றி கண்டுகொள்வதே இல்லை என குற்றம் சாட்டுகிறோம்.

அவர்கள் வீட்டிலேயே இருந்தால், சோம்பேறி என்கிறோம். அவர்கள் குழந்தைகளை கண்டித்தால், கொடுமைக்காரர் என்கிறோம். தங்கள் தாய் மீது தீவிர அன்பு கொண்டால் அம்மா பிள்ளை என்கிறோம், மனைவியுடன் அன்புடன் இருந்தால் மனைவி பக்தன் என்கிறோம். இப்படி அவன் மீது தீராத முத்திரைகள் விழுந்து கொண்டே இருக்கிறது. உலகின் ஹீரோவாக இருக்கும் எந்த ஆணாக இருந்தாலும், அவர் தன் குழந்தை தன்னை விஞ்சி ஒரு படி உயர்ந்து நிற்க வேண்டும் என்றே ஆசை கொள்கிறார்கள்.

ஒரு தந்தை ஒரு ரோபோ போன்று வாழ்பவர். அவர் தனது குழந்தைகளை ஆழமாக நேசிக்கிறார். எல்லா நேரங்களிலும் அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறார். ஒரு தந்தை தன் குழந்தைகளுக்காக எல்லா சுமைகளையும் சுமக்க தயாராக இருப்பவர். குழந்தை தவழந்து, நடந்து பின்னர் நன்கு வளர்ந்து பெரியவராக மாறும் அவர்களின் ஒவ்வொரு பாரத்தையும் தன் தோளில் சுமக்கிறான். தன் வாழ்வின் விலைமதிப்பற்ற அனைத்தையும் தன் குழந்தைகளுக்குக் கொடுக்கும் தந்தை இந்த உலகத்திற்கு ஒரு பரிசு.

இதையும் படிங்க: சர்வதேச செவிலியர் விருது... இறுதிப் பட்டியலில் 2 இந்தியர்கள்... எப்படி தெரியுமா?

ஒரு தாய் குழந்தையை ஒன்பது மாதங்கள் வயிற்றில் வைத்திருப்பாள், ஆனால் ஒரு தந்தை தனது குழந்தையை வாழ்நாள் முழுவதும் மனதில் வைத்திருப்பார். நம் வாழ்வில் ஆண்கள் இருந்தால் தான் இந்த உலகம் அழகாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பெற்றோருக்கு வணக்கம் செலுத்துங்கள். அவரது நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்." இவ்வாறு உருக்கமாக எழுதியுள்ளார் அந்த மனைவி. இவரின் இந்த பதிவு தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

First published:

Tags: Husband Wife, Love life, Viral News