பாம்புகள் மற்றும் கீரிகளுக்கான பகை பற்றிய கதைகள் மிகவும் பிரபலமானவை. பாம்பும் கீரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டால் அவர்களுக்குள் போர் நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இருவருக்குள்ளும் ஏன் இந்த பகை என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எல்லாவற்றிற்கும் மேலாக, ஏன் இவைகள் ஒன்றையொன்று விரும்பவில்லை? என நினைத்திருக்கிறீர்களா...
ஃபாரஸ்ட் வைல்ட் லைஃப் என்ற இணையதள அறிக்கையின்படி, கீரி மற்றும் பாம்பு இரண்டையும் எதிரியாகவே இயற்கை உருவாக்கியுள்ளது. இது அவர்களின் இயற்கையான உள்ளுணர்வு. பல வகையான பாம்புகள் கீரி குட்டிகளை தங்கள் இரையாக ஆக்குகின்றன. அந்த நேரத்தில் பெண் கீரிப்பிள்ளை இல்லாத போது மிகவும் சின்ன குட்டிகளை அவைகள் தாக்குகின்றன. கீரிகள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க பாம்புகளைத் தாக்குவதற்கு இதுவும் ஒரு காரணம்.
கீரியின் உணவில் பாம்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை உணவுச் சங்கிலியின் ஒரு பகுதியாகும். ஆனால் இந்த சண்டையில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி எழுகிறது. நகரங்கள் அல்லது கிராமங்களில் நீங்கள் எளிதாகக் காணக்கூடிய இந்திய கீரிப்பிள்ளைகள், மிகப்பெரிய பாம்புகளை வெல்லும். உலகின் மிக நச்சு மிகுந்த பாம்பு, ராஜநாகம் கூட இந்த கீரிகளுக்கு பலியாகின்றன.
பாம்புகளை விட கீரிகள் மிகவும் வேகமானவை, அவை பாம்பின் உடலின் தலை மற்றும் பின்புறத்தில் ஒரு அபாயகரமான தாக்குதலைக் கொடுக்கின்றன. இது மரணத்திற்கு வழிவகுக்கிறது. ஆனால் பல சமயங்களில் பாம்பு தாக்குதலால் கீரி இறந்துவிடுவதும் நடக்கிறது. அவைகள் ஒரு பாம்பை கொன்று சாப்பிடும் போது, பாம்பின் பற்கள் அவற்றின் வயிற்றில் அல்லது உடலின் வேறு எந்தப் பகுதியிலும் துளைக்கப்படுகின்றன. இதன் காரணமாக உள் இரத்தப்போக்கு தொடங்கி அது மரணத்திற்கு வழிவகுக்கிறது. கீரிக்கும் பாம்புக்கும் இடையிலான சண்டையில் கீரி 75 முதல் 80 முறை வெற்றி பெறும் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.