முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / வாழைப்பழம், முட்டையை மண்ணில் புதைத்தால் இப்படி ஒரு பலன் தருமா? ஆச்சரியம் தந்த வீடியோ!

வாழைப்பழம், முட்டையை மண்ணில் புதைத்தால் இப்படி ஒரு பலன் தருமா? ஆச்சரியம் தந்த வீடியோ!

வாழைப்பழம் - முட்டை

வாழைப்பழம் - முட்டை

வாழைப்பழம் மற்றும் முட்டை மண்ணில் அழுகி, உரமாக செயல்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முட்டை, வாழைப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் சுவையாக இருப்பதோடு, அழகு சாதனப் பொருட்களை தயாரிப்பதற்கும் பயன்படும். ஆனால் ஒருவர் முட்டை மற்றும் வாழைப்பழங்களை ஒன்றாக மண்ணில் புதைத்து வைத்தார், அதன் பிறகு தான் அதிசயம் நடந்தது. முட்டை, வாழைப்பழங்களை மண்ணில் புதைத்த பின், யாரும் நினைக்காத பலன் கிடைத்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தோட்ட வேலை செய்யும் நபர் ஒருவர் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த நபர் வாழைப்பழத்தையும் முட்டையையும் மண்ணில் போட்டு அதன் மீது தக்காளி விதைகளை வைப்பதை வீடியோவில் காண முடிகிறது. இதைத் தவிர, அந்த நபர் வேறு எதையும் பயன்படுத்தவில்லை. சில நாட்களில் ஆச்சர்யம் தரும் வண்ணம், அங்கே ஒரு தக்காளி செடி பூத்தது.

அந்த நபர் இரண்டு மூன்று வாழைப்பழங்களையும், இரண்டு உடைந்த ஒரு முழு முட்டையும் சேர்த்து வைத்துள்ளார். நீங்கள் விரும்பினால் முட்டை ஓடுகளையும் பயன்படுத்தலாம். பின்னர் இந்த நபர் தரையில் 14-16 அங்குல குழி எடுத்து, அதில் முட்டை, வாழைப்பழத்தை போட்டு, அதன் மீது மண் போட்டுள்ளார். அந்த மண்ணில் தேவையான செடிகளின் விதைகளைப் போடலாம். அந்த விவசாயி தக்காளி விதைகளை பயிரிட்டுள்ளார்.

' isDesktop="true" id="973368" youtubeid="oYCw1XlhMzE" category="trend">

வாழைப்பழம் மற்றும் முட்டை மண்ணில் அழுகி, உரமாக செயல்படுகிறது. இது தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. தனி உரம் தேவையில்லை.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published: