முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / காதல் எப்படி இருக்கும்...? மனம் உருக வைக்கும் நெட்டிசன்களின் பதில்கள்...!

காதல் எப்படி இருக்கும்...? மனம் உருக வைக்கும் நெட்டிசன்களின் பதில்கள்...!

காதல்

காதல்

காதல் என்றால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிண்டர் பக்கத்தில் நெட்டிசன்களை அவர்களைக் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருசில கேள்விகளுக்கு எவ்வளவு தேடினாலும் நமக்கு திருப்தியான பதில் கிடைக்காது அல்லது இன்னும் சிறப்பான அதில் வேண்டும் என்ற தேடல் தொடர்ந்துக்கொண்டே இருக்கும். அதுபோல தான், காதல் என்றால் என்ன, காதல் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பதில் இருக்கும். சமீபத்தில் ட்விட்டரில் காதல் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு நபர் பகிர்ந்த ட்வீட் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறார். டிண்டர் என்ற ஒரு டேட்டிங் ஆப்பில் காதல் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு நெட்டிசன்கள் மனம் உருக வைக்கும் அளவுக்கு கொட்டி தீர்த்து இருக்கிறார்கள்.

ஒரு தலைக்காதல், முதல் காதல், தீவிரமான் காதல் வரை உலகம் முழுவதிலும் எக்கச்சக்கமான காதல் கதைகள் உள்ளன. எல்லாருமே தன்னுடைய காதல் தான் மிகச் சிறந்தது, இது போன்ற இன்னொரு காதல் மற்றவருக்கு கிடைக்காது என்று கூறுவார்கள். காதல் அனுபவமும், உணர்வுகளும் ஒரே மாதிரி இருக்காது. இந்தியாவின் பிரபலமான டேட்டிங் ஆப்பில் காதல் பற்றிய தலைப்பு சுவாரஸ்யமாக பேசப்பட்டது.

உலகம் முழுவதும் ஹிட் அடித்த Friends என்ற சிட்காம் பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். 90ஸ் கிட்ஸ் முதல்  இந்த வெப் தொடரை லட்சக்கணக்கான இந்தியர்கள் கொண்டாடி இருக்கின்றனர். இதில் வரும் ஒவ்வொரு கேரக்டருமே முத்திரை பதித்தவை. இதில் சாண்ட்லர் மற்றும் மோனிகா தான் மாதிரிதான் என்னுடைய காதல் இருக்கும் என்று ஒரு யூசர் ட்வீட் செய்திருக்கிறார்.

https://twitter.com/assfitasmansi/status/1663898704225644545?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1663898704225644545%7Ctwgr%5Ec121daf17698c2fece0679f5744ef39840c47913%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fviral%2Finternet-overflows-with-heartwarming-stories-as-tinder-asks-what-love-looks-like-7977865.html

காதல் என்பது மனிதர்களுக்கு, ஆண்-பெண்ணுக்கு இடையில் இருக்கும் அன்பு மட்டும் இல்லை. விலங்குகள் மீது செலுத்தப்படும் அன்பும் காதல் தான். விலங்குகளை நேசிப்பதும் காதல் தான், என்பதை வலியுறுத்தும் விதமாக மற்றொருவர் அழகான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ‘இதுவும் சேர்த்துக் கொள்ளப்படுமா?’ என்ற கேள்வியுடன் ட்விட் செய்திருந்தார். உண்மையிலேயே இந்த அழகான புகைப்படம் மனிதர்கள் மற்றும் நாய்களுக்கு இடையில் இருக்கும் உன்னதமான தூய்மையான அன்பை வெளிப்படுத்துகிறது.

ரொமாண்டிக் உறவு என்பது மனிதர்களோடு மட்டும் அல்லாமல், ஒரு சிலர் தங்களுடைய பேஷன் மற்றும் தங்கள் அதிகமாக விரும்புவது மீது இருக்கும் காதலையும் அழகாக ட்விட் செய்திருக்கிறார்கள். இதில் உணவு மீதான காதலை அற்புதமான புகைப்படங்கள் வழியாக பகிர்ந்து ட்வீட் செய்துள்ளார்கள். காதல் என்பது ஐஸ்கிரீம் மாதிரி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் டிவீட் இங்கே.

காஃபி பிரியர்களுக்கான டிவீட்!

காதல் என்பது மற்றவர்கள் மீது வைக்கும் அன்பு மட்டுமல்ல, ஸெல்ப் லவ் என்று கூறப்படும் தன்னைத் தானே நேசிப்பது, தனக்கு பிடித்தவற்றை செய்து கொள்வது என்பதும் காதல் தான், அது இப்படி இருக்கும் என்று அழகாக வெளிப்படுத்தும் ஒரு டிவீட்!

First published:

Tags: Love, Lovers, Tinder app, Twitter