முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்க மாற்றி யோசித்த ஓவியர்... குவியும் பாராட்டு

மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்க மாற்றி யோசித்த ஓவியர்... குவியும் பாராட்டு

காட்சிப் படம்

காட்சிப் படம்

மரங்கள் நம் மண்ணின் பாதுகாவலன் என்ற எண்ணம் நமக்கு ஏற்பட வேண்டும். அப்படி எண்ணம் நமக்குள் உதித்தால் மரங்களை பாதுகாக்க நாமே உறுதி கொள்வோம்.

  • Last Updated :
  • Tamil Nadu |

மேற்கு வங்கத்தில் ஓவியர் ஒருவர் இயற்கை மீதான விழிப்புணர்வை எற்படுத்துவதற்காக மரங்களில் ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார்.

இயற்கையின் பெரிய அரண் மரங்கள். மரங்கள் தான் நாம் சுவாசிக்கும் காற்றை சுத்திகரிக்கும் ஆலைகள். மரங்கள் தான் நமக்கு மழை பொழிய வைக்கும் காரணிகள். நமக்காக நிழலையும் கனியையும் கொடுக்கும் மரங்கள் மீது நமக்கு மதிப்பே இல்லை.

நமது வசதிக்காக ஆயிரக் கணக்கான மரங்களை நாம் வெட்டி விடுகிறோம் தவிர்க்க முடியாத காரணத்திற்காக ஒரு மரத்தை வெட்ட நேர்ந்தால் அதற்கு பதிலாக பல மரக்கன்றுகளை நாம் நட்டு பாதுகாக்க வேண்டும். அப்போது தான் இயற்கை அழியாமல் இருக்கும். ஆனால் அதை நாம் செய்வதில்லை. இது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மரங்களில் ஓவியங்கள் வரைந்து அசத்தி வருகிறார் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஓவியர் சஞ்சய் சர்க்கார். மேற்குவங்க மாநிலம் பானிப்பூர் பகுதியில் ஹப்ராவை சேர்ந்தவர் தான் இந்த சஞ்சய் சர்க்கார்.

மரங்கள் வெட்டப்படாமல் தடுப்பதற்காக இந்த யுக்தியை கெயில் எடுத்துள்ளார் சஞ்சய். இவர் மரங்களின் தண்டுகளில் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களைக் கொண்டு பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்து வருகிறார். இவரின் கை வண்ணத்தில் மரங்களில் கடவுள்கள், விலங்குகள், பறவைகள் என ஓவியம் தத்ரூபமாக மிளிர்கின்றன.

இப்படி தன் ஓவியங்கள் மூலம் இயற்கைக்கு நன்றி பாராட்டுகிறார் சஞ்சய். இப்படி மரங்களில் சஞ்சய் வரையும் ஓவியங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. இவரின் முயற்சியை பலரும் பராட்டி வருகிறார்கள். மரங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் முன்னால் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள்.

painting on trees
காட்சிப் படம்

தன் ஓவியங்கள் மூலம் இயற்கை மீது மக்களுக்கு மரியாதையும், அதை பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணமும் வர வேண்டும் என்பது தனது குறிக்கோள் என்கிறார் சஞ்சய் சர்க்கார். இவரது மர ஓவியங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலரும் அதை பாராட்டி வருகிறார்கள். இப்படி இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்கிற இவரது விழிப்புணர்வு சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்க: மிளகாய் சாகுபடியில் லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் ராஜஸ்தான் விவசாயிகள்!

top videos

    மரங்கள் நம் மண்ணின் பாதுகாவலன் என்ற எண்ணம் நமக்கு ஏற்பட வேண்டும். அப்படி எண்ணம் நமக்குள் உதித்தால் மரங்களை பாதுகாக்க நாமே உறுதி கொள்வோம். அப்படியான எண்ணம் நமக்குள் எழ வேண்டும் என்ற பணியைத் தான் தனது ஓவியங்கள் வழியாக செய்து வருகிறார் சஞ்சய் சர்க்கார். சஞ்சய் சர்க்காரின் முயற்சிக்கு வாழ்த்து சொல்ல நினைத்தால் நாமும் ஒரு மரக்கன்றை நட்டு அதை பாதுகாப்போம்.

    First published: